பெங்களூரு, ஏப். 11- ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுகின்ற வகையில் “வெண்மைப் புரட்சி” என்பதாக திட் டங்கள் நடைமுறைக்கு வந்தன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் என ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகள் முன்னெடுப்பில் பால் உற்பத்திக்கு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. கிராமங்களில் அமைக்கப் பட்ட பால் உற்பத்தி கூட்டுறவுச் சங் கங்களை இணைத்து மாநில அளவில் கூட்டமைப்பினை உருவாக்கி பாலைக் கொள்முதல் செய்து மக்களுக்கு விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைக்கப்பட்ட கூட் டமைப்பில் தமிழ்நாட்டில் “ஆவின்” என்ற பெயரிலும், கருநாடகாவில் “நந்தினி” என்ற பெயரிலும், கேரளாவில் “மில்மா”, குஜராத்தில் “அமுல்” என்ற பெயரிலும் விற்பனை முத்திரைகளுடன் (Marketing Brances) பால் மற்றும் பால் பொருள்களின் விநோயகம் மூலம் மக் களின் தேர்வையை பூர்த்தியை செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் விற்பனை முத்திரையுடன் உள்ள பால் பொருள் களில் ஒன்றான தயிர் விற்பனையில் தயிர் பாக்கெட்டில் ஆங்கிலத்தில் ‘Curd‘ என்றும் அந்தந்த மாநில மொழிகளில் தயிருக்கு வழக்கத்தில் உள்ள பெயரையும் அச்சிட்டு வழங்கி வந்தன. அண்மையில் ஆங்கில மற்றும் மாநில மொழிப் பெயர்களுடன் ‘தகி‘ எனும் ஹிந்தி மொழிச் சொல்லும் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு தமிழ் நாட்டிலும், கருநாடகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு முதலமைச்சர் இதனை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட சூழலில் ஒன்றிய அரசின் தயிருக் கான ஹிந்திப் பெயர் திணிப்பு திரும்பப் பெறப்பட்டது.
அந்தந்த மாநிலப் பால் பொருள்கள் உரிய விலையில், தரத்துடன் விற்பனை செய்ப்பட்டு வருகையில் – ஆதிக்கத்தின் வெளிப்பாடாக குஜராத்தின் “அமுல்” பால் பொருட்கள் விற்பனை செய்யப் படுவதற்கு உள்துறை அமைச்சரே ‘முக வராக’ இருந்து பரிந்துரை செய்கிறார். இது கருநாடகா மாநிலத்தில் பலத்த எதிர்ப்பை பால் உற்பத்தியாளர் கூட் டமைப்பு சார்பில் எழுப்பியுள்ளது. கரு நாடக மாநில பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிலையில் கருநாடகத்திற்கென ‘நந்தினி’ உள்ள நிலையில் குஜராத்திலிருந்து ‘அமுல்’ ஏன் திணிக்கப்பட வேண்டும் என எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
#கோபேக் அமுல்# #சேவ் நந்தினி# முழக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பெருகி வருகின்றன.
ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒட்டு மொத்த நாட்டிற்குமான தனது பொறுப்பினை புறந்தள்ளி, தனக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் சொந்த மாநிலமான குஜராத்தில் தயாரிக்கப் படும் “அமுல்” பால் பொருள்களுக்கு வக்காலத்து வாங்கி வருவது, கரு நாடகத்தில் பரவலான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மே மாதம் கருநாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே பால் பொருள் அதுவும் குஜராத்தின் “அமுல்” என்பதைத் திணித்து குறுகிய வட்டத்தில் செயல் பட்டு மாநிலங்களின் நலன்களுக்கு பாதகமாக நடந்து வருகிறது. இதன் விளைவுகள் கருநாடக சட்டமன்ற தேர்தலில் வெளிப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.