அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ.26  அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (28.11.2023) உருவாகிறது. தமிழ்நாட்டில் வரும் டிச.1ஆ-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை யொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வரும் 29-ஆம் தேதி காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும்  இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (27.11.2023) முதல் டிச.1-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய் யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். நவ. 25ஆ-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை அடையாறில் 8 செ.மீ., தரமணியில் 7 செ.மீ., கடலூர் மாவட்டம் புவனகிரி, சென்னை அண்ணா நகர், பெருங்குடி, ஆலந்தூர், பெரம்பலூர் மாவட்டம் எறையூர் ஆகிய இடங்களில் 5 செ.மீ., கடலூர் மாவட்டம் தொழுதூர், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், தேனாம்பேட்டை, அய்ஸ் ஹவுஸ், சென்னை விமானநிலையம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 27, 28-ஆம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத் தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *