காவேரிப்பட்டினம், ஏப். 11- கிருட்டினகிரி மாவட்டம்,.காவேரிப்பட்டினம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் (08-.04.2023) சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் காவேரிப்பட்டினம் ஆனந்தா புத்தக நிலையம் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம் தலைமையில் நடைபெற் றது. ஒன்றிய செயலாளர் பெ.செல் வேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம், மாவட்ட அமைப்பாளர் தி. கதிரவன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் தா .சுப்பிர மணியம் ,கோ. திராவிட மணி ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்ட தலைவர் த அறிவர சன் தொடக்க உரையாற்றினார்.
தோழர்கள் ஒவ்வொருவரின் கருத்து ரைக்கு பின் இறுதியாக மாநில பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் அவர்கள் றப்புரை ஆற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் .1. கிருட்டினகிரியில் கட்டப்பட்டுள்ள பெரியார் மய்யம் கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் என் 2 .
வருகின்ற ஏப்ரல் 14ஆம் நாள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காவேரிப் பட்டினம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது என தீர்மானிக்கப்படு கிறது.
தீர்மானம்.3. கிருட்டினகிரி மேனாள் மாவட்ட தலைவர், சுயமரியாதைச் சுடரொளி தா. திருப்பதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி ஏப்ரல் 14ஆம் தேதி அன்று அவருடைய படத்திற்கு மாலை அணி வித்து வீரவணக்கம் செலுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் இக்கூட்டத்தில் மேனாள் ஒன்றிய தலைவர் சி .சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வே. புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.கிருஷ்ணன், கிருட்டினகிரி நகர தலை வர் கோ. தங்கராசன், ஜெயின் ,மத்தூர் ஒன்றிய தலைவர் கி .முருகேசன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.