ஒன்றுபட்ட ஜெர்மனி யப் பேரரசின் உல்ம் (Ulm) என்ற இடத்தில் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (14.3.1879) பிறந்தார். இவரது தந்தை மின்சார பாகங்கள் தயாரிக் கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவரது தாயார் ஒரு இசைக் கலைஞர்.
அய்ஸ்டைன் தன்னுடைய தந்தையாரின் ஆய்வுகளை உடனிருந்து பார்த்து அந்த ஆய்வுகளின் முடிவுகள் குறித்து தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யத் துவங்கினார். இங்கிருந்துதான் அவரதுகணித அறிவு உருவாக்கியது
அய்ன்ஸ்டீனுக்கு அய்ந்து வயதாக இருந்தபோது, அவரது தந்தை அவருக்கு ஒரு திசைகாட்டி (Compass) காட்டினார். அந்த ஊசி ஒரு கண்ணுக்குத் தெரியாத விசையினால் ஈர்க்கப்பட்டு எப்போதும் வடக்கு நோக்கியே நிற்பதைக் கண்டு அய்ன்ஸ்டீன் வியப்படைந்தார். இந்தச் சிறிய நிகழ்வுதான் இப்பெருவெளியின் புலப்படாதவைகள் அனைத் தையும் ஆய்வுசெய்ய அவருக்குள் ஒரு தீப்பொறியை ஏற்படுத்தியது.
நவீன இயற்பியலின் தூண்களில் ஒன்றான சார்பியல் கோட்பாட்டை (Theory of Relativity) உருவாக்கியவர் இவரே!
ஒளிமின் விளைவு (Photoelectric effect) பற்றிய விதிகளுக்காக 1921-ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவரின் பல கண்டுபிடிப்புகள் பழைமைவாதி களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே இவர் அமெரிக்கா சென்று அங்கேயே தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
