பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சல்!  

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்வரி – இவரது தந்தை சிறுவணிகர். ராஜேஸ்வரி இந்திய அளவில் ஒன்றிய அரசின் தேர்வாணையத் தேர்வில் ‘இரண்டாமிடம்’ பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

மதிப்பெண்ணில் இவருக்கு முன்னதாக வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த அக்னி ஹோத்ரி என்பவர் வெறும்  மிக குறைவான மதிப்பெண் விகிதத்தில் தான் முதலிடம் பிடித்துள்ளார் –  என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் பிடிக்காத பார்ப்பனக் கூட்டம் புலம்பத் தொடங்கியுள்ளது. பொறுக்கமுடியாத ஒரு பார்ப்பனர் இப்படி எழுதியுள்ளார்.

‘‘Tamil Nadu is criminally wasting money on unproductive sections of society instead of building proper infrastructure and urbanism. If this continues, the decline will begin in next 5 years.’’

‘‘தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், திறமையற்ற சமூகப்பிரிவினருக்கான நலத்திட்டங்களுக்கு திருட்டுத்தனமாக அதிக நிதி செலவிடுவதாகவும், இது தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலம் நாசமாகப் போகும்’’ என்று எழுதியுள்ளார்.

முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் சாதனை இமயத்தின் உச்சிக்கு ஒப்பானதாக மாறிவிட்டது கடந்த 4 ஆண்டுகள் முதலமைச்சரின் சீரிய சிந்தனையில் தொடர்ந்து திறம்பட வழிகாட்டுதலின் பலன் கிடைக்கத் தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டிலிருந்து தேர்வெழுதிய 60 பேரில் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் படித்த 56 பேர் அரசுப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்கள். அதிலும் இந்திய அளவில் நடைபெற்ற ஒன்றிய அரசின் தேர்வாணையத் தேர்வில் ‘இரண்டாமிடம்’ மற்றும் ‘7ஆம் இடம்’ இரண்டுமே ‘நான் முதல்வன்’ மூலம் தேர்வெழுதிய தமிழ்நாட்டு மாணவர்கள் என்பது எளிதில் கடந்துபோகும் செய்தி அல்ல!

அடுத்த அய்ந்து ஆண்டுகளில் தமிழர்கள் அதுவும் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் இந்தியாவில் முக்கிய பதவிகளில் அமர்வார்கள் – தந்தை பெரியாரின் கனவு இதுதானே!

ஆனால் பார்ப்பன ஆதிக்கக் கூட்டத்தின் வயிற்றெரிச்சல் அதிகமாகிக்கொண்டு வருகிறது.

தேர்வெழுதி இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த சிறுவணிகர் ஒருவரின் மகளான ராஜேஷ்வரி ஊடகம் ஒன்றில் பேட்டியளிக்கும் போது ‘‘நான் முதல்வன் திட்டமும் அரசு கொடுத்த ஊக்கமும் தான் என்னை இந்த அளவிற்கு முன்னேற்றியது’’ என்றார்.

இதுதான் பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணமாகும். ஆண்டாண்டுக் காலமாக அய்.ஏ.எஸ். போன்ற ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் தேர்வுகளில் கொடி கட்டிப் பறந்த கூட்டம் பார்ப்பனர்களே!

இப்பொழுது அதற்கு மரண அடி விழுந்து விட்டது என்றாலும் – இன்றைக்கும் அவர்களின் விகிதாசாரத்தைவிட  பல மடங்கு இடங்களை விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

‘முழுச்சுளையாக விழுங்க முடியவில்லையே’ என்கிற ஆத்திரம் தான் இப்படியெல்லாம் எழுதச் செய்கிறது.

இப்பொழுதுகூட யுபிஎஸ்இ நேர்முகத் தேர்வில் என்ன நடக்கிறது?

அபலாமிஸ்ரா என்ற பார்ப்பன மாணவி முதன்மைத் தேர்வில் (Mains) பெற்ற மதிப்பெண் 816; நேர்முகத் தேர்வில்  (இண்டர்வியூ) பெற்றதோ 215; மொத்த மதிப்பெண் 1031.

ரியாடோபி என்ற பெண் முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண் 859; ஆனால் நேர்காணலில் அளிக்கப்பட்ட மதிப்பெண்ணோ 162; மொத்த மதிப்பெண் 1021.

இந்தப் பெண் (ரியாடோபி) முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை விட – பார்ப்பனர் பெண் பெற்ற மதிப்பெண்  43 மதிப்பெண் குறைவு. ஆனால் நேர்முகத் தேர்விலோ தலைகீழாக உள்ளது. அபலாமிஸ்ரா 53 மதிப்பெண் அதிகமாம், அது எப்படி?

ஒன்றிய தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திலும்கூட சமூகநீதிப் பின்பற்றப்பட வேண்டும் என்பதைத்தான் இது அறிவுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெறுவதால் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஆரம்பத் தேர்வுக்கு (Preliminary) மாதம் ஒன்றுக்கு ரூ.7500; முதன்மைத் தேர்வுக்கு (Mains) மாதம் ரூ25,000; நேர்முகத் தேர்வுக்குப் பயண செலவு உட்பட ரூ.50,000.

இதன் காரணமாகத்தான் அடி மட்டத்தில் கிடந்துழலும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்ற உயர் பதவித் தேர்வுகளில் வெற்றி பெற்று பெரும் பதவிகளில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. நன்றி உணர்வோடு ‘திராவிட மாடல்’  அரசைப் பாராட்டுகிறோம்.

வயிற்றெரிச்சல்காரர்கள் மேலும் மேலும் வயிற்றெரிச்சல் படும் அளவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களும் முனைப்புடன் ‘திராவிட மாடல்’ அரசின் ஏணிப்படிகளில் ஏறட்டும்! ஏறட்டும்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *