தஞ்சை, மார்ச் 14- தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்ப கோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, லால்குடி, துறையூர், மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் 13-03-2026 வெள்ளி மாலை 05.30 மணியளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது
கழக பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ், தலைமையேற்று மாநில மாநாட்டிற்கு உழைத்த கழக தோழர்களுக்கு. தலைமைக் கழகத்தின் சார்பில் நன்றி பாராட்டி பயனடை அணிவித்துப் பேசினார்.
தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ் செல்வன், கடவுள் மறுப்பு கூறி அனை வரையும் வரவேற்றார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தொடக்க உரையாற்றினார்.

தஞ்சை மாவட்ட காப்பாளர் ம.அய்யனார், மாநாட்டு வரவு செலவுகளை வாசித்தார்.
மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்ட காப்பாளர் பெ.வீரையன், கும்பகோணம் மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், லால்குடி மாவட்ட தலைவர் வீ. அன்புராஜா, தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் க.தென்னவன், மன்னார்குடி மாவட்ட செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம் மாவட்ட செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், ஆகியோர் உரையாற்றினர்
தஞ்சை மாவட்ட மகளிர் அணித் தலைவர் அ.கலைச்செல்வி, லால்குடி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் அ.செல்வி, தஞ்சை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ச.அஞ்சுகம், குடந்தை மாவட்ட மகளிர் அணித் தலைவர் எம்.திரிபுரசுந்தரி, தஞ்சை மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் தெ.மலர்கொடி, தஞ்சை மகளிர் பாசறை ஒ.பாக்கியம் சி.சிறீமதி, திருச்சி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர். பொன்னரசு, தஞ்சை மாவட்ட துணை செயலாளர் A.சுப்பிரமணியன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, மன்னார்குடி மாவட்டத் துணைத் தலைவர் ந.இன்பக் கடல், தஞ்சை மாவட்ட கலை இலக்கிய தலைவர் நாராயணசாமி, தஞ்சை மாவட்ட ப.க. இணைச் செயலாளர் லெட்சுமணன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இளவரசன், தஞ்சை மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.பிரகாஷ், பட்டுக்கோட்டை மாவட்ட ப.க. செயலாளர் காமராஜ், மன்னை மாவட்ட ப.க.தலைவர் கவுதமன், ப.க.செயலாளர் சங்க.வீரமணி, மன்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் சிந்தனை அரசு, ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் த ஜெகநாதன், ஒன்றியச் செயலாளர் மானல் பரமசிவம், துணைத் தலைவர் கு.நேரு, அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர் ஜவகர், சாலியமங்கலம் நகர தலைவர் அண்ணாதுரை, பேராசிரியர் குட்டிமணி, பெரியார் சமூக காப்பு அணி செயலாளர் பொய்யாமொழி, மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி, கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், கரந்தை பகுதி செயலாளர் எம்.தனபாலன். தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் வே.துரை, தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.க.பெரியார் செல்வன், மாநகர கலை இலக்கிய அமைப்பாளர் கவிஞர்.பகுத்தறிவு தாசன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், மன்னை நகர செயலாளர் கோவி.அழகிரி, மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், பூதலூர் ஒன்றியத் தலைவர் அல்லியூர் இரா.பாலு, ஒன்றியத் துணை தலைவர் இரா.புகழேந்தி, துணைச் செயலாளர் பா.விஜயக்குமார், அல்லியூர் ப.துரைராஜ், தஞ்சை பி.வி.ஆர்.வீரமணி, க.ஜோதிபாசு, ஆலங்குடி ரா.கதிரவன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) ஜெயராமன், இ.பி.காலனி பகுதி செயலாளர் இரா.பரந்தராமன், ஆயக்குடி கதிரவன், பொன்னாம்பூர் திருநாவுக்கரசு, வெற்றி பள்ளி தாளாளர் வரதராஜன், வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன், அ.குழந்தைசாமி. ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மாநில கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், தீர்மானங்களை வாசித்தார்.
நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு, திராவிடர் கழக வழக்கறிஞரணி மாநில செயலாளர் வழக்கறிஞர் முத்து.சித்தார்த்தன், பெரியார் பெருந்தொண்டர் நெடுவாக்கோட்டை தோ.தம்பிக்கண்ணு, ஒரத்தநாடு ஆயங்குடி இரா.கதிரவனின் சகோதரர் இரா.முரசொலிமாறன், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அன்பழகனின் சகோதரர் க.முத்தையன், திருவேதிக்குடி ஏ.இரவி, பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர், கா.தென்னவனின் தாயார் கா.பேபி, பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் வை.சிதம்பரத்தின் சகோதரர் மல்லிகை வை.முத்துராமவிங்கம், நாகை மாவட்டத் தலைவர், வி.எஸ்.டி.ஏ.நெப்போலியனின் தயார் வி.எஸ்.டி.ஏ. பிரணாம்பாள் பெரியார் பெருந்தொண்டர் அம்மன்பேட்டை எம்.எஸ்.கலியபெருமாள், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் தெற்குநத்தம் சு.குமரவேல் அவர்களின் தந்தையார் சுப்ரமணியன் ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று 21.02.2026 அன்று தஞ்சாவூரில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர்பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாடு, திராவிடர் இன எழுச்சி பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மிக எழுச்சியோடு வெற்றிகரமாக அமைந்திட உழைப்பை நல்கிய மற்றும் நன்கொடை வழங்கி சிறப்பித்தவர்கள், பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்த இருபால் கழகத் தோழர்கள் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் தனது நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
21.02.2026 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டு வரவு செலவு ஒப்படைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
15.03.2026 அன்று ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் மண்டலக்கோட்டை த.பரிதின் கலைவாணி ஆகியோர் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்கு ஒரத்தநாடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளிப்பது என மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவில் தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், நன்றி கூறினார்.
