வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க இந்திய தூதரக உதவி எண்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 14– ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல் காரணமாக, ஈரானிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தவித்து வருகின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 595 பேர் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வரக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மீனவர்கள்

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கீழே வழங்கப்பட்டுள்ள அந்தந்த நாட்டு இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதன்படி ஈரான் (டெஹ்ரான்) தூதரகத்தை +98 9128109115 (வாட்ஸ்-அப்), +98 9128109109 மற்றும் +98 9128109102 ஆகிய எண்கள் மூலமாகவும், துபாய் மற்றும் அய்க்கிய அரபு நாடுகளின் தூதரகத்தை +971 543090571 800 46342 ஆகிய எண்களிலும், சவுதி அரேபியாவுக்கு (ரியாத் மற்றும் ஜெட்டா) +966 542126748, +966 536209704 ஆகிய வாட்ஸ்-அப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இஸ்ரேல் நாட்டு (டெல் அவீவ்) தூதரகத்துக்கு +972 54 7520711 என்ற எண்ணையும், ஓமனுக்கு (மஸ்கட்) +968 98282270 மற்றும் கத்தாருக்கு (தோஹா) +974 55647502 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

வெளிநாடுகளில் இருந்து சென்னை அல்லது திருச்சி விமான நிலையம் வழியாக தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள், தமிழ்நாடு அரசின் மறுவாழ்வுத் துறையை தொடர்பு கொள்ளலாம். இதற்காக இந்தியாவுக்குள் அழைக்கக் கூடிய கட்டணமில்லா தொலைபேசி எண் +91 1800 309 3793 மற்றும் வாட்ஸ்-அப் எண் +91 9600023645 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

நேரில் அணுகியும் உதவி பெறலாம்

மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், சென்னை சேப்பாக்கம் எழிலகம் அனெக்ஸ் கட்டடத்தில் உள்ள ‘குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகத்தை’ நேரில் அணுகியும் உதவிகளைப் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னணி ஓ.டி.டி. தளமான

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்!

சென்னை, மார்ச் 14- பன்னாட்டு அளவில் முன்னணி ஓடிடி (OTT) தளமாக விளங்கும் நெட்பிளிக்ஸ் (Netflix), தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சில ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னிகரற்ற வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் மற்றும் பிரத்யேக நிகழ்ச்சிகளால் உலகெங்கிலும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டுள்ள நெட்பிளிக்ஸ், அவ்வப்போது தனது வணிக உத்திகளில் மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பணிநீக்கம் குறித்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து நெட்பிளிக்ஸ் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பணிநீக்க நடவடிக்கை ஊழியர்களின் பணித்திறன் குறைபாடு காரணமாக எடுக்கப்பட்டது அல்ல. நிறுவனத்தின் உட்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றங்கள் மற்றும் தேவையற்றதாகக் கருதப்பட்ட பதவிகளை நீக்கியதன் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். பணிநீக்கத் தகவல்களுக்கு இடையே மற்றுமொரு முக்கிய அறிவிப்பையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

வார்னர் பிரோஸ் (Warner Bros) மற்றும் டிஸ்கவரி (Discovery) தொடர்பான ஒப்பந்தப் போட்டியில் இருந்து தாங்கள் விலகிக் கொள்வதாக அந்நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சாரண்டோஸ் உறுதிப்படுத்தியுள்ளார். சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொண்டே இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

“பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது”

இந்தியன் ஆயில் நிறுவனம்

சென்னை, மார்ச் 14– பாட்டிகளில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தரவில், “பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது. பாட்டில்கள், கேன்களில் கொண்டு செல்லப்படும் பெட்ரோலால் பெரும் விபத்து ஏற்படலாம்.

பெட்ரோல் நிலையங்கள் இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் வழங்க வேண்டாம். பெட்ரோல் நிலையன்கள் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல்களை நிரப்ப வேண்டும் என்பதே சட்ட விதி. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது ஆபத்தானது மற்றும் குற்றச்ச்செயல்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைத்து விற்பனை நிலையங்களிலும் கேன்கள், பிளாஸ்டிக் கொள்கலன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *