மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும்! கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிருஷ்ணகிரி, மார்ச் 14– கிருஷ்ணகிரியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் உரையாற்றிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கடந்த 5 ஆண்டு சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 920 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாள்தோறும் 1.5 லட்சம் பயணங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 22 லட்சம் குழந்தைகளும், கிருஷ்ணகிரியில் 73 ஆயிரம் குழந்தைகளும் பயனடை கின்றனர். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் கீழ் 12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரியில் 56 ஆயிரம் பேர் பயனடைகின்றனர்.

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டதில் கிருஷ்ணகிரியில் 20 ஆயிரம் பேருக்கு கிடைத்துள்ளது. முதலமைச்சர் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1.32 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரியில் 3.55 லட்சம் மகளிர் பயனாளிகள் உள்ளனர். சிலர் திட்டத்தை நிறுத்த முயன்றனர். அதனால், சுட்டிக்காட்டிய அவர்,  அதை முதலமைச்சர் முன்கூட்டியே 3 மாதங்களுக்கான ரூ.3,000அய் கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2,000 கூடுதலுடன் (மொத்தம் ரூ.5,000) ஒரே தவணையில் வழங்கினார். அடுத்த ஆட்சியில் இதை ரூ.2,000-ஆக உயர்த்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட 38 லட்சம் பேருக்கு ரூ.2,000 சிறப்பு உதவி வழங்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டுதல், 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், ஸ்மார்ட் கிளாஸ் வசதி, ஸ்கூல் டிராப் அவுட் தவிர்ப்பு உள்ளிட்ட 14 முக்கிய வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் பாதாள சாக்கடை திட்டம் (ரூ.582 கோடி), நகர்த்திறன் பூங்கா (ரூ.210 கோடி), ஓசூர் அரசு மருத்துவமனை மேம்பாடு (ரூ.100 கோடிக்கும் மேல்), பாகலூர் புறவழிச்சாலை (ரூ.90 கோடி), தோட்டக்கலை கல்லூரி (ரூ.70 கோடி), மினி ஸ்டேடியங்கள், தொழிற்கூட வளாகம், தோழி தங்கும் விடுதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *