அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அடைந்த சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 14- சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு சாதித்து காட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17)

பூங்காக்கள் மேம்பாடு – 236 பணிகள்

மழைநீர் வடிகால்கள் – 1,442 கிலோமீட்டர்

பள்ளிகள் மேம்பாடு – ரூ. 533 கோடி

குடிநீர்த் திட்டப் பயன்பாடுகள் – ரூ. 5,447 கோடி

சாலைகள் மேம்பாடு – 3,455 கிலோமீட்டர்

வடசென்னை வளர்ச்சித் திட்டம் – சுமார் 7,000 கோடி ரூபாய்

இவை தவிர, பல்வேறு முதல்வர் படைப்பகங்கள், விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டுத் திடல்கள், நவீன வசதிகளுடன் கூடிய திருமண மாளிகைகள், புத்தம்புதிய வடிவமைப் பிலான பேருந்து நிலையங்கள், தாழ்தள மின் பேருந்துகள் எனச் சென்னையின் தோற்றம் ஏற்றம் பெற்றிருக்கிறது.

இன்னும் செய்வோம், உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030-இல் வளர்த்தெடுப்போம்!” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *