பழனி, ஏப். 11- பழனி கழக மாவட்டம் சார்பில் ஒட்டன்சத்திரம் நகரத்தில் 9-.4.-23 அன்று காலை 10.30 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட மாணவர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர் களின் தனித்திறமையைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு பூவரசன் தலை மையேற்றார்.ஒட்டன்சத்திர நகரத் தலைவர் வழக்குரைஞர் ஆனந்தன், நகர இளைஞரனித் தலைவர் சம் பத் உள்ளிட்ட கழகத் தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, பழனி மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார், புலவர் வீரகலாநிதி, பழனி நகரச் செய லாளர் சி.இராதாகிருட்டிணன், பழனி ஒன்றியத் தலைவர் மதண பூபதி, தி.முக பொறுப்பாளர் மோகன் உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் மாணவர்களுக்கு வழி காட்டுதல் உரை வழங்கினர். திண்டுக்கல் மண்டலத் தலைவர் நாகராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆனந்தமுனிராசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினர்.
இந்நிகழ்வின் நோக்கம் குறித்து திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர் பாண்டியன் நோக்கவுரையாற் றினார்.
இறுதியில் புருஸ் பெரியார் நன்றி கூறினார்.