தென்காசி, ஏப். 11- நேற்று (10.4.23) தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் தந்தை பெரியார் குருதி,விழி, மற்றும் உடற்கொடை கழக நிறுவனரும், நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளருமான அய்.இராமச்சந்திரனின் தாயாரும், மருத்துவர் உ.இரா.மானவீரனின் பாட்டியுமான மறைவுற்ற அய்.கனியம்மாள் அவர்களின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட கழக தலைவர் இரா.காசி, நெல்லை மாவட்ட கழக துணைத்தலைவர் ச.இராசேந்திரன் நெல்லை மாவட்ட கழக செயலாளர் இரா.வேல்முருகன் சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் சேகர், ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் நெல்லை மாவட்ட தி.க மகளிரணி தலைவர் இரா.பானுமதி தந்தை பெரியார் குருதி,விழி, மற்றும் உடற்கொடை கழக பொருளாளர் த.அசோக், தந்தை பெரியார் குருதி,விழி, மற்றும் உடற்கொடை கழக செயலாளர் அ.வ.சவுந்தரபாண்டியன், மருத்துவ மாணவர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.