காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா – படத்திறப்பு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஓரிக்கை, மார்ச் 13- 10.3.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியில் உள்ள குறளகம், தமிழர் தலைவர் கூடத்தில், அன்னை மணியம்மையார் படத்திறப்பு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி, அன்னை மணியம்மையார் படத்தைத் திறந்து வைத்து மணியம்மையாரின் செயல்பாடுகள் குறித்து நெகிழ்ச்சி யுடன் உரையாற்றினார்.

படத்திறப்பு விழாவில் காஞ்சி அமுதன், ரவி பாரதி, பாடகர் உலக ஒளி, மதிமுக தோழர்கள் குமரேசன், மாவட்ட மகளிர் அணி அ. ரேவதி, மாவட்ட பகுத்தறி வாளக் கழகத் தலைவர் பா. இளம் பரிதி, மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆ.மோகன் அறிவு வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராஜன் ஆகியோர் உரையாற்றினர்.

திராவிடர் கழகச் சொற் பொழிவாளர் முனைவர் காஞ்சி கதிரவன், தந்தை பெரியாருக்கும் இயக்கத்திற்கும் மணியம்மையார் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் மணியம்மையார் தொண்டு குறித்து அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் ஆகியோரின் பாராட்டு குறித்தும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மணியம்மையாரின் செயல்பாடு குறித்தும் சட்ட எரிப்புப் போராட்ட காலத்திலும் மிசா காலத்திலும் அன்னையாரின் செயல்பாடுகள் குறித்தும் இராவணலீலா நடத்தியது குறித்தும் விளக்கி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட பகுத்தறி வாளர்கள் கழகச் செயலாளர் அ.வெ. சிறீதர், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் அருண்குமார், வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல்வம், படப்பை கழகத்தோழர் சந்திரசேகர், கழக மகளிரணித் தோழர்கள் தவமணி, மருத்துவர் குழலரசி, மதிமுக தோழர் கே.பி. பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தீர்மானங்கள்:

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி சார்பாக அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கை சிறப்பாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட மாடல் அரசு மீண்டும் அமைந்திட, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை மீண்டும் முதலமைச்சராக அமர்த்திட தீவிரமாகப் பணியாற்ற தீர்மானிக்கப்பட்டது.

கழக வளர்ச்சிப் பணிகளை மேலும் தீவிரமாக செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கழக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், வாய்ப்புள்ள ஊர் களில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் படங்களைத் திறந்து வைப்பது என்று தீர்மானிக் கப்பட்டது.

மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *