“அறிவு இல்லம்” அறிமுக விழா! பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 13- சென்னை, சின்ன போரூரில், ம.பழனிவேல் ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட அறிவு இல்லத்தை, 12.03.2026 அன்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்.

“அறிவு இல்லம், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” எனப் பொறிக்கப்பட்ட கல்வெட்டை வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்த வீடுகளை உறவினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

வீ.அன்புராஜ் அவர்களுக்கு, பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்  ம.பழனிவேல்ராஜா, ப.கலா, தெ.ப.அறிவுச்செல்வி ஆகி யோர் பயனாடை அணிவித்து, ஆங்கில நூல்களை வழங்கி, பெரியார் உலகத்திற்கு ரூ 5 ஆயிரம் நன்கொடை வழங்கினர்.  விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணி விக்கப்பட்டது.

உயர்கல்வி பயில ஜெர்மனி நாட் டிற்குச் செல்லும் அறிவுச்செல்விக்கு, பயனாடை அணிவித்து வாழ்த்து களைத் தெரிவித்தார் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்.

சின்ன போரூர் பகுதியில் புதிதாக வீடு கட்டிச் சென்றாலும் மாநில ஒருங்கிணைப்பாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், சென்னை யின் அனைத்து மாவட்டத் தலை வர்கள், செயலாளர்கள், போரூர் பகுதியின் சுற்றுவட்டாரக் கழகத் தோழர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, கொள்கைபூர்மான நிகழ்வாக நடத்தப்பட்டது. கழகத்திற்குப் புதிய பகுதியாக இருந்தாலும், தெருக்கள் தோறும் கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

புதிய இல்ல அறிமுக விழாவில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை வே.செல்வம், வழக்குரைஞர் சு.குமாரதேவன், சென்னை 151 ஆவது பகுதி மாமன்ற உறுப்பினர் ச.சங்கர்கணேஷ், கியூபா கன்ஸ்ட்ரக்சன்ஸ் க.புனிதா, வி.சி.வில்வம், பு.வி.கியூபா, சென்னை மேற்கு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, மாவட்டச் செயலாளர் ராமாபுரம் க.சுப்பிரமணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை ஒளிப்படக் கலைஞர் ராதா, ஓ.இராமச்சந்திரன், பெரியார் நூலக வாசகர் வட்டப் பொறுப்பாளர் ஜெ.ஜனார்த்தனன், நெய்வேலி ஞானசேகரன், தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், தமிழ்மணி, வேலுச்சாமி, உடுமலை வடிவேல், அருள், ரேவந்த் குமார், உத்ரா சுப்பிரமணி, தாமோதரன், பெரியார் மணிமொழியன், ஜெயசீலன், கண்ணன், மூவேந்தன், மணிபாரதி, குன்றத்தூர் மு.திருமலை, சுரேஷ், கண்ணதாசன், பட்டூர் வெங்கடேசன், சன் சரவணன், சிலம்பம் சிவாஜி, டைசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இயக்க விழாவாக மூடநம்பிக்கை சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் சிறப்புடன் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *