டிஎன்பிஎஸ்சி குரூப்–1 சி கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வு மார்ச் 22 முதல் 25 வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஹால்டிக் கெட் (நுழைவுச் சீட்டு) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி மூலம் தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.சிறீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ளார்.
