ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று மாலை 5 மணியளவில் மணமேல்குடியில் கழக இளைஞரணி மாநில செயலாளர் த.சீ. இளந்திரையன் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் அழைப்பிதழ் வழங்கி கடைவீதி வசூல் பிரச்சாரத்தில் கழகத்தோழர்கள் ஈடுபட்டனர். அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு வணிகப் பெருமக்கள் மாநாட்டுக்கு நன்கொடையை மகிழ்வுடன் வழங்கினர் உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மணமேல்குடிஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ.யோவான்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் அ.சரவணன், மண்டல இளைஞ ரணி செயலாளர் க. வீரையா, மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராசா, பீ.அறிவுச் செல்வன், விமல்ராஜ், ஆகாஸ், கதிர்வேல், ரித்திக்ரோசன் ஆகியோர்.