டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்திய வரலாற்றில் முதன்முறையாக தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்து; இந்தியா கூட்டணி தலைவர்கள் மனுவை இந்த வாரம் நாடாளுமன்ற இரு அவை தலைவர்களிடமும் தர முடிவு.
* நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கானது மட்டுமல்ல, மாறாக, அது முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது”, கடைசியாக நான் பேசியபோது நான் நரவனே புத்தகம் குறித்த பிரச்சினை எழுப்பினேன். எப்ஸ்டீன் கோப்புகள் பற்றி பிரச்சனை எழுப்பினேன். அதானி பிரச்சனையை எழுப்பினேன். இந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்திய மக்களுக்கு அடிப்படை. இந்த விவகாரங்களில் நமது பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மத்திய ஆயுதக் காவல் படை துறையில் 93000 பணியிடங்கள் காலியாக உள்ளது, நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்.
தி இந்து:
*மேற்கு ஆசியாவில் மோதலின் வளர்ந்து வரும் பொருளாதார தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்; என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் கோரிக்கை.மேலும் இந்தியாவின் எரிசக்தி தயார் நிலை குறித்த “போலி மூல அடிப்படையிலான உத்தரவாதங்கள்” மூலம் ஒன்றிய அரசு தனது “முழுமையான திறமையின்மையை” மறைப்பதாக குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
