முதியோர்க்கும் உதவிக்கரம்! அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு நிதி உதவிக்கான அரசாணை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்வழங்கினார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 12 தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1534 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2025-2026ஆம் நிதியாண்டு முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 100 லிருந்து 150 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென ஆண்டிற்கு ரூ.6 கோடியே 98 லட்சம் தொடர் செலவினமாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முதுமைக்காலத்தில் தமிழறிஞர்களை வறுமை தாக்காத வண்ணம் மாதம்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் ரூபாய் வழங்கப்பெறுகிறது.
அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / கைம்பெண் மகளுக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 என அத்திருத்தொண்டு தொடர்கிறது.
அதன்படி 2024-2025ஆம் நிதியாண்டிற்கு சென்னை மாவட்டத்தில் 9 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5, காஞ்சிபுரம்-5, வேலூர்-3, திருவண்ணாமலை-7, விழுப்புரம்-2, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும், தருமபுரி-3, நாமக்கல்- 2, கோயம்புத்தூர்- 3, திருப்பூர்-2, நீலகிரி- 6, திருச்சி-4, புதுக்கோட்டை-3, சிவகங்கை-2, தஞ்சாவூர்-3, நாகப்பட்டினம்-3, மதுரை-3, தேனி- 4, விருதுநகர்- 2, திருநெல்வேலி- 2, கன்னியாகுமரி-2, திருப்பத்தூர்-2, செங்கல்பட்டு-2, ராணிப்பேட்டை-2, கள்ளக்குறிச்சி-3, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 34 மாவட்டங்களிலும் 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக அரங்கில் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *