தேசிய மாணவர் படை விருது! திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, மார்ச் 12- திருச்சிராப் பள்ளி, தேசிய மாணவர் படை (என்சிசி) குழு தலைமையகம் சார்பில் நடைபெற்ற விழாவில், சிறந்த முறையில் பணியாற்றிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் பி.கமலேஷ் கண்ணன், உயரிய விருதைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
திருச்சி 3ஆவது வான்படைப் பிரிவு (தமிழ்நாடு) தேசிய மாணவர் படையில் இளநிலை படை வீரராகப் (Flight Cadet) பயிற்சி பெற்று வரும் மாணவர் கமலேஷ் கண்ணன், 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியில் காட்டிய அபார ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் சீரிய செயல்பாட்டிற்காக ‘சிறப்புமிகு மாணவர் சான்றிதழ்’ மற்றும் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
“தேசமே முதன்மை – எப்போதும், எந்நேரமும்” என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில், தேசிய மாணவர் படையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை படைப்பிரிவுத் தளபதி கர்னல்.விஜயகுமார் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவர் கமலேஷ் கண்ணனை, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பணித் தோழர்கள் மற்றும் சக மாணவர்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *