அறிவியல் துளிகள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிரீன்லாந்தின் பனிப் பாறைகளுக்கு அடியில், வெப்பச் சலனம் நடப்பதை ரேடார் ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. புவியின் ஆழத்தில் கற்பாறை களுக்கு அடியில் உள்ள ‘மேக்மா’ குழம்புகளைப் போலவே, பனி அடுக்குகளுக்குள் ஏற்படும் இந்த விசித்திரமான நிகழ்வு, பனிப் பாறைகளின் கட்டமைப்பு பற்றிய அறிவியல் கணிப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள், அரிய புவித் தாதுக்களுக்கு மாற்றாகப் பயன்படக்கூடிய புதிய வகை அலுமினிய மூலக் கூறைக் கண்டறிந்துள்ளனர். முக்கோண வடிவிலான அலுமினியத் திரள்களைக் கொண்ட இது, மிகக் கடினமான வேதிப் பிணைப்புகளையும் உடைக்கும் திறன் கொண்டது. இது, மின்னணு சாதன உற்பத்தி செலவைக் குறைக்கும்.

வாயிலுள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக் களை அழிக்காமல், ஈறு நோயை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் குறிவைத்து அழிக்கும் புதிய பற்பசை ஜெல் உருவாக்கப் பட்டுள்ளது. இது வாயில் வசிக்கும் நுண்ணுயிரிக் கூட்டமைப்பை பாதுகாப்பது, நாள்பட்ட ஈறு நோய்களை விரட்ட உதவும் என பல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கனடாவின் கம்பர்லேண்ட் பகுதியில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் தேங்கியுள்ள நீரை, கட்டடங்களை வெப்பமூட்டவும், குளிரூட்டவும் உதவும் புவிவெப்ப ஆற்றலாக மாற்றும் முயற்சி துவங்கியுள்ளது. பாழடைந்த சுரங்கங்களை இதுபோல தூய எரிசக்தி மய்யங்களாக மாற்றினால், கார்பன் உமிழ்வைக் குறைக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வயது முதிர்வு காரணமாக, ஆண்களின் செல்களில் ‘ஒய்’ குரோமோசோம் படிப்படியாக மறைவது கண்டறியப் பட்டுள்ளது. இது மாரடைப்பு, புற்றுநோய், அகால மரணத்திற்குப் பின் இருக்கும் முக்கியமான காரணியாக இருக்கலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *