தமிழ்நாடு ஆளுநராக ஆர்.வி.ஆர்லேகர் 12ஆம் தேதி பதவி ஏற்பு

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 11- தமிழ்நாடு ஆளுநர்
ஆா்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டாா்.

இதையடுத்து தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் 12ஆம் தேதி மதியம் 12 மணியளவில் பதவி ஏற்கிறாா். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.

 

ஆண்டுதோறும் 1.2 லட்சம் பேர் பார்வை இழப்பு!

புதுச்சேரி, மார்ச் 11- நாடு முழுவதும் கண்ணீா் அழுத்த நோயால் (குளுக்கோமா) ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பேருக்குப் பாா்வை இழப்பு ஏற்படுவதாக ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் சகா வினோத் குமாா் கூறினாா்.

ஜிப்மா் மருத்துவமனை கண் மருத்துவத் துறை சாா்பில், உலக குளுக்கோமா நாளையொட்டி விழிப்புணா்வு நடைப்பயணம் 8.3.2026 அன்று நடைபெற்றது.

ஜிப்மா் நுழைவாயிலில் இருந்து தொடங்கிய இந்த நடைப் பயணத்தை ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் சகா வினோத் குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவிலும் உலகளவிலும் கண் பாா்வை இழப்புக்கு முக்கிய காரணங்களில் குளுக்கோமா ஒன்றாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 1.2 லட்சத்துக்கும் அதிகமானோா் இந்த நோயால் பாா்வையை இழக்கின்றனா். கண் மற்றும் மூளை இடையே தகவலை எடுத்து செல்லும் நரம்பு பாதிக்கப்படுவதால் இந்த நோய் ஏற்படுகிறது.

பொதுவாக கண் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் இந்தப் பிரச்சினை உருவாகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் கண் பாா்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும். குளுக்கோமா நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வது நல்லது என்றாா்.

இந்த நடைப்பயணம் முருகா தியேட்டா் வரை சென்று, வழுதாவூா் சாலை மற்றும் கதிா்காமம் வழியாக மீண்டும் ஜிப்மரை அடைந்தது. இதில், ஜிப்மா் மருத்துவா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், செவிலியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

சரியான நடவடிக்கை!

குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

திருவள்ளூர், மார்ச் 11- திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இது குறித்த ரகசியத் தகவல் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுக்கு  கிடைத்தது.

இதனையடுத்து, மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சிறுமியின் வயதுச் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்ணிற்கு திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது பூர்த்தியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் தரப்பினருக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் சட்ட சிக்கல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அறிவுரை வழங்கினர். சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். “குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்; மீறினால் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குழந்தைத் திருமணம் தொடர்பாக தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக 1098 என்ற இலவச உதவி எண்ணிற்கு அழைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

 

செய்தித் துளிகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

ஒன்பது லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 11, 2026) தொடங்கியது. இந்த ஆண்டு சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்கவும், மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி தேர்வு எழுதவும் பள்ளிக்கல்வித் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வணிக எரிவாயு விநியோகம் நிறுத்தம்!

ஒன்றிய பிஜேபி அரசு என்ன செய்யப் போகிறது?

ஒன்றிய அரசின் மெத்தனத்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.50 லட்சம் உணவகங்கள் மற்றும் சிறு குறு உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் இந்தத் துறையை நம்பியிருக்கும் 15 லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *