நாட்டின் இறையாண்மையை மோடி அரசு கைவிட்டுவிட்டது!
உலக மகளிர் நாளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மகளிருக்குக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுதான்!
உலக மகளிர் நாளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மகளிருக்குக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுதான்!
கோவை, மார்ச் 11 – நம்முடைய நாடு சுதந்திர நாடு என்றால், இறையாண்மை என்பது மிக முக்கியமானதாகும். அந்த இறையாண்மையை, மோடி அரசு கைவிட்டுவிட்டது. நாம், யாரிடம், எந்தப் பொருளை வாங்கவேண்டும் என்பதை, அமெரிக்கா முடிவு செய்யக்கூடாது. மகளிர் நாளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மகளிருக்குக் கொடுத்தி ருக்கின்ற மிகப்பெரிய பரிசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுதான். சிறந்த சிந்தனையாளரும், பிரபல விஞ்ஞானியுமான அய்யா ஜி.டி.நாயுடு அவர்களுடைய சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததற்காகப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- நாட்டின் இறையாண்மையை மோடி அரசு கைவிட்டுவிட்டது! உலக மகளிர் நாளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மகளிருக்குக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுதான்!
- செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
- ஜி.டி.நாயுடு சிலையை முதலமைச்சர் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி!
- நீண்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்
- முதலமைச்சருக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் நன்றி!
- மீண்டும் முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவியேற்பார்!
- கொள்கையே தெரியாதவர்களிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது!
- திரிசூலத்தை வைத்து, ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு எதை வேண்டுமானாலும் செய்யும்!
- பா.ஜ.க.வின் ‘B’ டீம் மாதிரிதான் நடந்துகொண்டிருக்கிறார்!
- உலக மகளிர் நாளில் ஒன்றிய அரசு, மகளிருக்குக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!
- நாட்டின் இறையாண்மையை, மோடி அரசு கைவிட்டுவிட்டது
- ஜி.டி.நாயுடு பெயரை ஜாதிப் பெயராகக் கருதவில்லை!
- ‘‘இராஜகோபாலாச்சாரியார்’’ என்பதை இராஜகோபால் என்றால், யாருக்காவது தெரியுமா?
- தவிர்க்க முடியாத விதிவிலக்காகக் கருதவேண்டும்!
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
தமிழர் தலைவர் ஆசிரியர்
கடந்த 9.3.2026 அன்று இரவு கோயம்புத்தூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நேற்று (10.3.2026) காலை, கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
ஜி.டி.நாயுடு சிலையை முதலமைச்சர் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி!
தமிழ்நாட்டினுடைய ஒப்பற்ற, சிறந்த சிந்தனை யாளரும், பிரபல விஞ்ஞானியுமான அய்யா ஜி.டி.நாயுடு அவர்களுடைய சிலையை சற்று நேரத்திற்கு முன், நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் இங்கே திறந்து வைத்த செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஜி.டி. நாயுடு அவர்கள், தந்தை பெரியார் அவர்களுக்கு மிக நெருக்கமான நண்பராவார். இவர்களுடைய நட்பு நீண்ட கால நட்பாகும்.
நீண்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்
எங்களுடைய அமைப்புகளுக்கும் ஜி.டி.நாயுடு அவர்கள் வருவார்கள். அவருடைய பெயரில், இந்தக் கோவையில் புதிதாகக் கட்டப்பட்ட நீண்ட பாலத்திற்கு அவருடைய பெயர் வைத்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்அ தேபோல, இன்று அவருடைய சிலையையும் அவர் திறந்து வைத்தது பாராட்டத்தகுந்ததும், வர வேற்கத்தகுந்ததும் ஆகும்.
முதலமைச்சருக்கும்,
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் நன்றி!
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் நன்றி!
மூத்த இயக்கமான திராவிடர் கழகத்தின் சார்பில், ஜி.டி.நாயுடு அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, முதலமைச்சர் அவர்களுக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்று, அறிஞர்கள், தமிழறிஞர்கள் அத்துணை பேருடைய பெருமைகளையும் உணர்த்தக் கூடிய ஆட்சி யாக – வரலாற்று ரீதியாக சிறப்பாகப் பணியாற்றக் கூடிய ஆட்சி தமிழ்நாட்டில் இருப்பதின் காரணத்தினால்தான், இதுபோன்ற பல நல்ல பணிகள் தொடருகின்றன.
மீண்டும் முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவியேற்பார்!
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மிகப் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவியேற்பார். அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை எங்களைப் போன்றவர்களால் நேரில் பார்க்க முடிகிறது.
இந்த மகிழ்ச்சிக்குரிய நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கோவை தோழர்களையும், ஊடக வியலாளர்களையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
செய்தியாளர்: விஜய் தலைமையில் உள்ள த.வெ.க., பா.ஜ.க. கூட்டணியில் சேரும் என்று சொல்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கொள்கையே தெரியாதவர்களிடம்
எதையுமே எதிர்பார்க்க முடியாது!
எதையுமே எதிர்பார்க்க முடியாது!
தமிழர் தலைவர்: அது ஒரு யூகம்தான். எப்படி வேண்டுமானாலும் அது ஆகலாம். ஏனென்றால், எந்தக் கொள்கையும் இல்லாதவர்கள், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவேண்டிய ஒரு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
எனவேதான், அவர் நடித்த திரைப்படம் வெளி வருவதைக் கூட கடுமையாகத் தடுத்த நேரத்தில்கூட, அதைப்பற்றி எந்தவிதமான விமர்சனங்களையும் அவர் செய்யவில்லை. அதுமட்டுமல்ல, அவர் கட்சியைத் தொடங்கி, முதலமைச்சராக ஆகவேண்டும் என்று நினைக்கக் கூடிய காலகட்டத்தில்கூட, அவருடைய ஒரே குறிக்கோள் தி.மு.க.வை தாக்கவேண்டும் என்பதுதான். பா.ஜ.க.வைப்பற்றி அவர் விமர்சனம் செய்யவில்லை என்பதிலிருந்தே எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
கொள்கைப் பிடிப்புள்ளவர்களிடம் அதை எதிர்பார்க்கலாம். கொள்கையே தெரியாதவர்களிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது. எப்போதும், எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
திரிசூலத்தை வைத்து, ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு எதை வேண்டுமானாலும் செய்யும்!
அதிலும், திரிசூலம் மோடி ஆட்சியில் எப்போதும் இருக்கிறது. அந்தத் திரிசூலத்தின் ஒருமுனை – வரு மான வரித் துறை; இன்னொரு முனை – சி.பி.அய்.; மூன்றாவது முனை – அமலாக்கத் துறை.
எனவே, எது வேண்டுமானாலும் அரசியலில் நடக்கலாம். வெறும் யூகத்தை மட்டுமே வைத்து எதையும் சொல்ல முடியாது.
பா.ஜ.க.வின் ‘B’ டீம் மாதிரிதான் நடந்துகொண்டிருக்கிறார்!
இதுவரையில், அவர் பா.ஜ.க.வின் ‘B’ டீம் மாதிரிதான் நடந்துகொண்டிருக்கிறார். பா.ஜ.க.வைப்பற்றிேயா, ஒன்றிய பா.ஜ.க. ேமாடி அரசைப்பற்றியோ விமர்சிப்பது கிடையாது. மோடி அரசு என்ற ஒன்று இருப்பதாகவே அவர் கருதாமல், மிகத் தந்திரமாக நடந்துகொள்வதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஆகவே, கொள்கை உள்ளவர்களானால், அதைப் பற்றி யோசிப்பார்கள்; கொள்கையையே முடிவு செய்யப்பட முடியாதவர்கள் எப்படிப்பட்ட நிலையை வேண்டுமானாலும் எடுக்கலாம்.
உலக மகளிர் நாளில் ஒன்றிய அரசு, மகளிருக்குக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!
செய்தியாளர்: ஈரான் போரினால், எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கை கள் எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: மகளிரை, ‘நாரி சக்தி’ என்றெல்லாம் சொன்னார்கள். உலக மகளிர் நாளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மகளிருக்குக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுதான்.
வெளியுறவுத் துறை கொள்கை என்பது, ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதன் விளைவு, பெட்ரோல், எரி பொருள்களுக்கு நெருக்கடி ஏற்படக்கூடிய நிலை வரும்.
யுத்தம், சீக்கிரத்தில் முடியவில்லை என்றால், அதனுடைய விளைவு, சாதாரண மக்களைக்கூட, நம்முடைய நாட்டில் இருக்கக்கூடியவர்களைப் பாதிக்கக் கூடிய அளவில் இருக்கிறது. அதை எந்த அளவிற்குச் சமாளிக்கப் போகிறது ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு என்பது அப்போதுதான் மிகத் தெளிவாகத் தெரியும்.
எனவேதான், இது ஒரு இக்கட்டான காலகட்டம். அவர்கள், இதைச் செய்கிறோம், அதைச் செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர, செய்ய வேண்டியதை முதலில் செய்திருக்கிறார்களா, என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஒரு பக்கம், நம்முடைய நாட்டின் ரூபாய் மதிப்பு, கீழிறக்கத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாள் தவறாமல், கீழிறக்கம். இன்னொரு பக்கத்தில், தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
இதற்கிடையே, பெட்ரோலிய எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகின்ற நிலையும் வந்தால், மக்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். ஏற்கெனவே, சிலிண்டர் விலையைக் கடுமையாக ஏற்றியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஏற்கெனவே விலைவாசியைக் கட்டுப்படுத்த ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு தவறிவிட்டது என்பது ஒரு குற்றச்சாட்டு. இதற்குத் தீர்வு காணவேண்டும்.
செய்தியாளர்: அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அந்நாட்டு அமைச்சர், எல்லாவற்றிற்கும் எங்க ளுடைய அனுமதியைப் பெற்றுத்தான் இந்தியா செயல்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?
நாட்டின் இறையாண்மையை,
மோடி அரசு கைவிட்டுவிட்டது
மோடி அரசு கைவிட்டுவிட்டது
தமிழர் தலைவர்: நம்முடைய நாடு சுதந்திர நாடு என்றால், இறையாண்மை என்பது மிக முக்கிய மானதாகும். அந்த இறையாண்மையை, மோடி அரசு கைவிட்டுவிட்டது.
நாம், யாரிடம், எந்தப் பொருளை வாங்கவேண்டும் என்பதை, அமெரிக்கா முடிவு செய்யக்கூடாது.
நம் வீட்டில், என்ன குழம்பு வைக்கவேண்டும் என்பதை, அயலார் முடிவு செய்தால் எப்படி இருக்குமோ, அதுபோன்றுதான் இதுவும்.
ஜி.டி.நாயுடு பெயரை ஜாதிப் பெயராகக் கருதவில்லை!
செய்தியாளர்: ஜாதி, மதத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசின் செயல்பாடு இருக்கிறது. தெருவிற்குக்கூட ஜாதிப் பெயர் இருக்கக்கூடாது என்று நினைக்கிற அரசு, இந்தப் பாலத்திற்குப் பெயர், ஒரு ஜாதி அடையாளத்தை வைத்திருக்கிறார்களே, அதுகுறித்து விமர்சனங்கள் வந்திருக்கிறதே?
தமிழர் தலைவர்: ஜி.டி.நாயுடு என்ற பெயரை, ஜாதிப் பெயராகக் கருதவில்லை. அவருடைய பெயரிலேயே அது அமைந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது.
உதாரணத்திற்கு, ஜி.துரைசாமி நாயுடு என்பதுதான் அவருடைய பெயர். உலகம் முழுவதும் தெரிந்த பெயர் ஜி.டி.நாயுடு என்பதுதான். அவர், கையொப்பம் போடுவதும் ஜி.டி.நாயுடு என்றுதான்.
ஆகவேதான், அதை நாம் ஜாதிக் கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டிய அவசியமில்லை. பாலம் திறந்து வைக்கின்றபோதே, அதைப்பற்றி விரிவான விளக் கத்தை எழுதியிருக்கின்றோம்.
‘‘இராஜகோபாலாச்சாரியார்’’ என்பதை இராஜகோபால் என்றால், யாருக்காவது தெரியுமா?
உதாரணத்திற்கு ஒன்றை உங்களுக்குச் சொல்கி றேன், ‘‘இராஜகோபாலாச்சாரியார்’’ என்று பெயர் இருக்கிறது. அதை நீங்கள் எப்படி எழுதுவீர்கள்? ‘‘இராஜகோபால்’’ அவர்கள் வந்தார்கள். பழைய கவர்னர் ஜெனரல் இராஜகோபால் வந்தார்’’ என்றால், யாருக்காவது அவரை அடையாளம் தெரியுமா? எழுதலாம், ஆனால், இராஜகோபால் என்றால், யார் என்று தெரியாது. எத்தனையோ இராஜகோபால்கள் இருப்பார்கள்.
அதேபோன்று, சங்கராச்சாரி, பெயரை எப்படிச் சொல்வீர்கள்? சங்கராச்சாரி என்பதை எடுத்துவிட்டு, அவருடைய பெயரை சொல்ல முடியுமா?
தவிர்க்க முடியாத விதிவிலக்காகக் கருதவேண்டும்!
ஆகவேதான், ஜி.டி.நாயுடு, என்று பெயரோடு அமைந்துவிட்ட காரணத்தினால், அவற்றைத் தவிர்க்க முடியாத விதிவிலக்காகக் கருதவேண்டுமே தவிர, வேறொன்றும் கிடையாது.
எனவே, இதற்கு விளக்கம் தேவை என்றால், விளக்கம் சொன்னால், பொதுமக்கள் திருப்தி அடை வார்கள். சிலரது விஷமத்தனத்தைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
