சென்னை, ஏப்.12- சட்டப் பேரவை யில் நேற்று (11.4.2023) கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய இத்துறை அமைச்சர் காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:
கலைஞர் கருணாநிதி நூற் றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா ஆரணியில் அமைக்கப்படும்.
இளைஞர்களுக்கான நெசவுப் பயிற்சி மற்றும் தொழில் முனை வோர் திட்டம் ரூ140 கோடியில் செயல்படுத்தப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.
சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் கைத்தறி நெசவா ளர்கள் சந்தா செலுத்தப்பட வேண்டிய கால அளவினை 25 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டு களாக குறைக்கப்படும்.
இறுதி நிகழ்வு (இறப்பு) உதவித் தொகை ரூ2 ஆயிரத்தில் இருந்து ரூ5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் படும். நெசவாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ263.90 லட்சம் மதிப்பில் 3,006 தறிகள், உபகரணங்கள் வழங்குதல் மற்றும் 56 நெசவாளர்களுக்கு ரூ67.20 லட்சத்தில் தறிக்கூடங்கள் அமைத்து தரப்படும்.
‘கைத்தறி ரகங்கள் பிரபலப்ப டுத்தும் திட்டம்’ செயல்படுத் தப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட் டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் தொடங்கப்படும்.
கைத்தறி ரகங்களை காட்சிப் படுத்த 4 மெட்ரோ நகரங்களில் ’வாங்குவோர் விற்போர் சந்திப்பு’ நடத்தப்படும்.
கரூர் சாயச்சாலையில், ரூ20.40 லட்சத்தில் சீஸ் வடிவ நூல் சாய மிடும் இயந்திரம் நிறுவப்படும்.
உபபொருட்கள் விற்பனையகம் கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ 75 லட்சத்தில் சென்னையில் அமைக் கப்படும்.
அனைத்து ஜவுளிப் பிரிவுகளை யும் ஒருங்கிணைத்த மாபெரும் ஜவுளி நகரம் பொது-தனியார் கூட்டாண்மையின் அடிப் படையில் சென்னையில் பெங் களூரு நெடுஞ்சாலையில் அமைக் கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான பன்னாட்டு கருத் தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு மேற் கொள்ளவும் ஆராய்ச்சி மய்யங்கள் மற்றும் தொழில்முனைவோருடன் 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் நுட்பம் மற்றும் உதவிகள் வழங்கிட துணிநூல் துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரத்யேக ’ஜவுளித்தொழில் ஊக்குவிப்பு பிரிவு’ அமைக்கப்படும்.