சென்னை, ஏப். 12- சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை, மேனாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் மருத் துவமனை வளாகத்தில் கட்டப் பட்டு வரும் பன்னோக்கு மருத்து வமனை கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண் டனர். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்தமிழறிஞர் எ.வ.வேலு கூறுகையில், “ஜூன் மூன்றாம் தேதி மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் காரணமாக நூற் றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
அவரது பிறந்தநாளில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த புதிய மருத்துவமனை கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மே 15ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும்.
கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டத் தினையொட்டி இந்த மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
இதன் மூலம் இந்த மருத்து வமனை ஜூன் மாதம் திறக்கப்படும். கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு கலைஞர் பெயர் சூட்டுவது குறித்து முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் முடிவெடுப்பார்கள்” என கூறினார்.