இடங்கண்ணி வீ.ராஜகுமாரி படத்திறப்பு கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் நினைவுரை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இடங்கண்ணி, மார்ச் 11– தா.பழூர் – அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் இடங்கண்ணியில் ஒன்றிய துணைத் தலைவர் இராஜேந்திரனின் அண்ணியார் வீ. ராஜகுமாரி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி  8.3.2026 பகல் 11 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அம்மையாரின் உருவப்படத்தை திறந்து வைத்து நினைவுரையாற்றினார்.

ராஜேந்திரன் வரவேற்புரையாற் றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், காப் பாளர் சி.காமராஜ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். படத்தினை திறந்து வைத்த கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் நமது இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும் பார்ப்பனர்கள் சொல்லும் மந்திரங்கள் தமிழர் களை இழிவுபடுத்துவதையும் மூட நம்பிக்கைகளை விளக்கியும், மருத்துவ வளர்ச்சியின் பயனால் நீண்டகாலம் வாழ வாய்ப்பு ஏற்பட்டிருப்பதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தியும் உடற்கொடை விழிக்கொடை குறித்து விளக்கியும் சிறப்புரையாற்றினார் .

ஒன்றிய செயலாளர் பி.வெங் கடாசலம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் இரா. திலீபன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மு.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.ஜி.மணிகண்டன, மாவட்ட தொழிலாளரணிதலைவர் தா.மதியழகன், தொ.அ.செயலாளர் வெ.இளவரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், வி.அணி செயலாளர் ஆ.இளவழகன், மாவட்ட தொ.அணி துணை தலைவர் மா.கருணாநிதி, ஒன்றிய துணைச் செயலாளர் உதயநத்தம் சி.தமிழ்சேகரன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், ஜெயங்கொண்டம் நகர தலைவர் துரை. பிரபாகரன் ஆயுதகளம் ரங்கராஜன், கிருஷ்ணமூர்த்தி, வடலூர் குணசேகரன், அரியலூர் ஒன்றியத் தலைவர் சி.சிவக்கொழுந்து, கார்குடி சூரியநாராயணன் உள் ளிட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *