சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களின் பராமரிப்பாளர் பணியிடங்களானது நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி பூங்கா பராமரிப்பாளர் பணிக்காக 20 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ (தோட்டக்கலை) அல்லது பி.எஸ்சி (தோட்டக்கலை / வனவியல் / வேளாண்மை / தாவரவியல்) தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 33 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
இந்த பணியிடங்களானது ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது என்றும் எந்த வகையிலும் பணி நிரந்தரம் கோர முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தங்கள் சுயவிவரம் அடங்கிய பயோடேட்டா, கல்வி சான்று, அனுபவச் சான்று ஆகியவற்றை இணைத்து Superintending Engineer, Park and Play field Department, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 600003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ 25.03.2026 க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
