பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேலைவாய்ப்பு முகாம் – 2026

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், மார்ச் 10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பயிலும் கலை, அறிவியல், மேலாண்மை வணிகவியல் பொறியியல் துறைகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்புக்கான நேர்காணல் முகாம் இப்பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மய்யத்தால் 07.03.2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. வேலைவாய்ப்பு துறையின் இயக்குனர் பேரா.எம்.மகேஸ்குமார் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. வெ.இராமச்சந்திரன் தலைமையுரை யாற்றும் போது வேலைவாய்ப்பு முகாம் அய்சிடி அகாடமியின் பூர்ணசந்திரன் துணை பொது மேலாளர் மற்றும் சுமன் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

அய்சிடி அகாடமியின் நிர்வா கத்தினர் பல நிறுவனங்களை வரவழைத்து நேர்காணல் வேலை வாய்ப்பு முகாமினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமது வாழ்த்தினை தெரிவித்தார்.  மேலும் அய்சிடி அகாடமி துணைபொது மேலாளர் பூர்ணபிரகாஷ் உரையாற்றும் போது 12 நிறுவனத்தை வரவழைத்து நேர்காணல் வேலைவாப்பு முகாமினை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நமது நிறுவனத்தின் திறமை மிக்க நல்ல ஆற்றல் மற்றும் நெறிமுறை உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெறுவதற்கு தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் நிறுவனத்தின் குறிக்கோள் புதிய சிந்தனை புதுஉலகு, புத்தாக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஓர் ஆண்டு பயிற்சி பெற்றால் போதும் அந்நிறுவனம் உங்களுக்கு மதிப்பு அளிக்கும் என்றார்.

அய்சிடி அகாடமியின் துணை பொது மேலாளர் உரையாற்றும் போது வேலைவாய்ப்பு நேர்முக காணலுக்கு செல்லும் முன் எந்த நிறுவனத்தால் வேலை வாய்ப்பு நடத்தப்படுகிறதோ அவர்களின் சுயவிவரத்தினை அறிந்துக்கொள்ளவேண்டும் என்றார்.

மேலும் படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரியாக இருந்துவிடக்கூடாது என்றும் நல்ல அறிவையும் சரளமாக பேசக் கூடியவர்களாக நேர்முககாணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில் சரியோ தவறோ நல்ல ஆற்றலுடன் அவர்களுக்கு பதில்கூற வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா. ஆர்.மல்லிகா மற்றும் பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா, ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வேலை வாய்ப்பு நேர்காணலில் துறை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்களும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் 12 நிறுவனங்கள் (எச்.டி.பி.எப்.எஸ், இ.சி.இ.எஸ்.அய்.எஸ். குரூப், வெர்டிக்கல் சொலுயூசன், (பாக்ஸ்கான், டாடா எலெக்ட்ரானிக்), தேவரா கிரிஸ்ட்டிரிய க்ராமின் பைனான்சியல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட், ஏ.இசட்.எஸ், டெக்னோ கேலக்சிஸ், பிக்கோர் ட்ரியல், பெசன்ட் டெக்கானலாசியஸ், ஒமேகா ஹெல்த் கேர், டெக்ஸ்சால் இன்னாவேசன்ஸ், சஸ்மா க்ளோபல் பிரைவேட் லிமிடெட், எஸ்.எம்.எஸ்.இ, ஸ்டாபிங் சொலுயூசன் பிரைவேட் லிமிடெட்,  பங்குபெற்றன.  இந்நிறுவனங்களின் மேலாண்மை முதன்மையர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்பட்ட இம் முகாமில் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முனைவர் எம்.மகேஸ்குமார், இயக்குநர் (வேலைவாய்ப்பு) உதவி இயக்குநர்கள் ப்ராங்கிலின் ஜேசாப், ஜோசப் இமானுவேல் ஆகியோர் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இறுதியாக பல்கலைக்கழக அய்சிடி அகாடமியின் ஒருங்கிணைப் பாளர் பேரா. ப.இளங்கோவன் கணினி பொறியியல் துறை அவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *