ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயைவிட மோசமான மருந்து ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 10- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயைவிட மோசமான மருந்து என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து பல்வேறு நாடுகளின் தேர்தல் முறையை ஒப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு :

* ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நோயைக் குணப்படுத்த அதைவிடக் கொடுமையான ஒரு மருந்தைத் தருவதற்கு சமம்.

* இது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் இது.

* தேர்தல்களை நடத்துவதில் இருக்கும் நிர்வாகச் சிக்கல்களுக்காக ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே முடக்க நினைப்பது தவறு.

* இது மெல்ல மெல்ல ஒரு ‘அதிபர் ஆட்சி’ முறைக்குத் தள்ளி, மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்துவிடும்.

* நிர்வாக வசதிக்காக அரசியலமைப்புச் சமநிலையையும், மக்களின் உரிமைகளையும் பலி கொடுக்கக் கூடாது.

* ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில சட்டமன்றங்களை பலவீனப்படுத்தும் செயல். இது கூட்டாட்சிக்கு முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

என்று பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *