


*திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில், ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள். * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலில் இருந்து, மருத்துவப் பகுதிகளை மட்டும் தொகுத்தளித்த – அத்துடன் முப்பெரும் விழாவை நடத்திய கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களுக்கு, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார். * பெரியார் கல்வி நிறுவனங்களால் ஏற்பட்ட மகளிர் மேம்பாடு, அதை உருவாக்கிய தமிழர் தலைவரின் உழைப்புக் குறித்துப் பேசிய திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் அவர்களுக்கு, துணை முதல்வர் பயனாடை அணிவித்தார்.* வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல் நூல் குறித்து, சிறந்த ஆய்வுரையை வழங்கிய சிறப்பு விருந்தினர், பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைப் பேராசிரியர்
என்.முருகேஸ்வரி அவர்களுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூல்களை வழங்கினார்.
