பட்டுக்கோட்டை, மார்ச் 10 சாய்நிஷாந்த் பட்டுக் கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். தற்போது தமிழ்நாடு முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில், சாய்நிஷாந்தின் தந்தை அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் 6.3.2026 அன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டது. மாணவர் சாய்நிஷாந்திற்கு 6.3.2026 அன்று வேதியியல் தேர்வு நடைபெற்றது – தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் வேதியியல் தேர்வை எழுதினார். இது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
l உலகளவில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரி ழப்புகளில் பாதிக்கும் மேலானவை இந்தியாவில் நிகழ்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50,000 முதல் 58,000 பேர் பாம்பு கடியால் உயிரிழப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
