“கருப்பு உடை தரித்த சமுதாய துறவி” அன்னை மணியம்மையார்- க. சரஸ்வதி (பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச்சங்கம், தமிழ்நாடு)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘விடுதலை’ எங்கள் வழிகாட்டி தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவுப் பத்திரிக்கை. ‘தந்தை’ என்ற சொல்லை நீக்க முடியாது. எங்கள் வழிகாட்டியின் பெயரை ‘தந்தை பெரியார்’ என்றே அச்சிடுவோம். உங்களின் இந்த நிலை நிரந்தரம் அல்ல. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்; நாங்கள் அனைத்தையும் எதிர்கொள்வோம்.

 

தமிழ் மக்களால் அன்போடு அன்னை மணியம்மையார் எனப் போற்றப்படும் அன்னையாரின் இயற்பெயர் காந்திமதி.

“கருப்பு உடை தரித்த சமுதாயத் துறவி ” என போற்றப்படத்தக்க ஈ.வெ.ரா. மணியம்மை, திராவிட இயக்கத்தின் மிக முக்கியமானவராக இருந்தும் போதிய அளவில் பேசப்படாத வரலாற்று நாயகிகளில் ஒருவர். பெரியார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, அர்ப்பணிப்புள்ள பராமரிப்பாளராக இருந்து உறுதியான அரசியல் வழிகாட்டியாக உயர்ந்தார்.

கருப்பு உடையின் அர்த்தம்

அவர் அணிந்த கருப்பு சேலை, சமூக அநீதி மற்றும் ஜாதி அடக்குமுறைக்கு எதிரான நிரந்தரப் போராட்டத்தின் சின்னமாக இருந்தது. அது துக்கத்தின் நிறமல்ல; எதிர்ப்பின் நிறம்.

கட்டுரை

பெரியாரின் கொள்கைகள் – வாழ்க்கை வழி

தந்தை பெரியார் கனவுகண்ட சமூகப் புரட்சி, ஜாதியற்ற சமூகம், மேலும் பெண்களை ஆணாதிக்கத் தின் அடக்குமுறையிலிருந்து விடுவித்தல் ஆகியவை அன்னையின் முதன்மை அக்கறைகளாக இருந்தன. அந்த அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக, நாகம்மையார் மறைவுக்குப் பிறகு, தொண்ணூற்று அய்ந்து வயது வரை தந்தை பெரியாரின் உடல்நலத்தை மணியம்மையார் அக்கறையுடன் பேணியதுடன், அவரது போராட்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் அனைத்துக் கொள்கைப் பணிகளிலும் முழு மனப்பூர்வத்துடன் துணைநின்றார்.

திருமணம் – ஒரு இயக்கத் தேவையே

நாகம்மையார் மறைவிற்கு பத்தாண்டுகளுக்கு பின்னர், அன்றாடத் தேவைகளில் பெரியாருக்கு துணை நிற்க மணியம்மையார் வந்தார். பெரியாரின் சொத்து மற்றும் இயக்க நிதிகளை பொறுப்புடன் காக்கும் ஒருவரை அவர் நாடினார். சட்ட ரீதியாக “தத்தெடுத்த மகளுக்கு” சொத்துரிமை இல்லாத சூழலில், இயக்கத்தின் தொடர்ச்சியும் பாதுகாப்பும் உறுதி செய்யும் நோக்கில் பெரியார் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

இதன் நோக்கம் தெளிவு:

“இது சொத்துக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு மட்டுமே; தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கைக்காக அல்ல. இயக்க நலனுக்கான தவிர்க்க முடியாத முடிவு.”

ஆனால், இந்த உயரிய நோக்கத்தையும் மீறி மணியம்மையார் அவதூறுகளையும் இகழ்ச்சிகளையும் தாங்கினார்.

பெண் தலைமையின் உறுதியான சான்று

1973 ஆம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பிறகு, திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, பகுத்தறிவும் சமூக நீதியும் கொண்ட ஒரு பெரிய இயக்கத்தை பெண் ஒருவர் திறம்பட வழிநடத்த முடியும் என்பதை நிரூபித்தார்.

பெண்கள் விடுதலை – செயல்பாட்டுப் போராட்டம்

தேவதாசி முறை, குழந்தைத் திருமணம், விதவைத் தனத்தின் அவமதிப்பு – இவற்றுக்கு எதிராக அவர் இடையறாத பிரச்சாரங்களை நடத்தினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்ற முன்னோடித் தலைவர்களைப் போல், மதத்தின் பெயரில் பெண்கள் மீது நிகழ்ந்த கட்டமைக்கப்பட்ட சுரண்டலை எதிர்த்தார். குழந்தைத் திருமணத்தை அவர் “மனித உரிமை மீறல்” எனக் குறிப்பிட்டார். வயது சம்மதச் சட்டங்களின் கடுமையான அமலாக்கத்திற்காக குரல் கொடுத்தார்.

சுயமரியாதைத் திருமணங்கள்

பெரியார் தொடங்கிய சுயமரியாதைத் திருமணங் களை அவர் தொடர்ந்தார். புரோகிதர் இன்றி, சமஸ்கிருத மந்திரங்கள் இன்றி,வயது வந்த இரு பாலர்களின் சம்மதத்தை மய்யமாகக் கொண்ட இத்தகைய திருமணங்கள் சமூக மாற்றத்தின் புரட்சிகர நடைமுறையாக அமைந்தன.

ராவண லீலா – கலாச்சார எதிர்ப்பு

1974 ஆம் ஆண்டு நடைபெற்ற ராவண லீலா, ஒரு சாதாரண எதிர்ப்பு மட்டுமல்ல; வட–தெற்கு அதிகாரச் சமநிலையை சவாலிட்ட கலாச்சார எதிர்ப்பின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும். அது ஒரு நாடகமல்ல; சிந்தனையின் புரட்சி.

அவசரநிலை – தலைமைத் தைரியம்

அவசரநிலை காலத்தில், அச்சு ஊடகங் களுக்கு கடுமையான தணிக்கை விதிக்கப் பட்டது. இயக்கத்தின் அதிகாரப்பூர்வ நாளி தழான ‘விடுதலை’ நாள்தோறும் தணிக்கை அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்பட்டது.

ஒரு கட்டத்தில், “தந்தை பெரியார்” என்ற சொல்லில் இருந்து “தந்தை” என்ற வார்த்தையை நீக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டது. அதற்கு அன்னை மணியம்மையார் தைரியமாக எதிர்த்துக் கூறினார்:

“விடுதலை’ எங்கள் வழிகாட்டி தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவுப் பத்திரிக்கை. ‘தந்தை’ என்ற சொல்லை நீக்க முடியாது. எங்கள் வழிகாட்டியின் பெயரை ‘தந்தை பெரியார்’ என்றே அச்சிடுவோம். உங்களின் இந்த நிலை நிரந்தரம் அல்ல. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்;  நாங்கள் அனைத்தையும் எதிர்கொள்வோம்.”

அந்த உறுதியான பதில், அதிகாரியின் வார்த்தைகளை முடக்கியது.

இந்த நிகழ்வு, பெரியார் தேர்ந்தெடுத்த வாரிசு எவ்வளவு சரியானவர் என்பதை வரலாற்றில் நிலைநிறுத்தியது.

கட்டமைப்புகளை உருவாக்கிய சமூகத் தாய்

மணியம்மையார் போராட்டங்களில் மட்டுமே நிற்கவில்லை; மாற்றத்திற்கான அடித்தளங்களையும் உருவாக்கினார்:

  • நாகம்மையார் இல்லம்: ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மய்யங்கள்; பகுத்தறிவும் சுயநிறைவும் கொண்ட வளர்ப்பு மய்யங்களாக உருவாக்கினார்.
  • கல்வி அறக்கட்டளைகள்: தனிப்பட்ட செல்வத்தை கல்விக்காக அர்ப்பணித்து, இன்று பல கல்வி நிறு வனங்கள் வழியாக பெண்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார்.

முடிவுரை

ஈ.வெ.ரா. மணியம்மையார் –

அவர் ஒரு தலைவி மட்டுமல்ல.

அவர் தன்னலமற்ற தியாகத்தின் உருவகமும்,

கொள்கை பற்றுடைய உறுதியின் நிரந்தரச் சின்னமும் ஆவார்.

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *