உரத்தநாடு ஒன்றியம் முக்கரையில் கழகக் கலந்துரையாடல்

Viduthalai
2 Min Read

அரசியல்

முக்கரை, ஏப்.12 உரத்தநாடு ஒன்றியம், முக்கரை, வெள்ளூர்,புதுவளவு, வடசேரி, புலவன்காடு, தெலுங்கன்குடிக்காடு கிளைக்கழகங்களின் திரா விடர் கழக கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 11.04.2023 செவ்வாய் இரவு 7 மணியளவில் முக்கரை சுடர் வேந்தன் இல்லத்தில் நடைபெற்றது 

தெற்குபகுதிசெயலாளர் முக்கரை சுடர் வேந்தன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார் 

மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் இயக்க செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர் அய்யா அவர்களின் தொண்டின் சிறப்பு குறித்து தொடக்க வுரையாற்றினார்,

தொடர்ந்து, வடசேரி கிளைக்கழகத் தலைவர் இராமசாமி, வெள்ளுர் இராமச்சந்திரன், புதுவளவு மெய்யழகன், வடசேரி இளங்கா, ஒன்றிய துனைச் செயலாளர் நாபிரபு, ஒன்றிய மகளிரணி தலைவர் அல்லிராணி, மாவட்ட இணைச் செயலாளர் தீ.வ.ஞானசிகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மாவட்டத்துனைத் தலைவர் முத்து. இராஜேந்திரன், பெரியார் வீரவிளையாட்டு  கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், ஒன்றியத் தலைவர்  த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

மாவட்டச்செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சியடையும்  வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என வழியுறுத்தி உரையாற்றினர்

கூட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்  இயக்கத்தின் கட்டுபாடுகள் குறித்தும் கொள்கை தலைமையை முன்னிறுத்தி கழகத்தோழர்கள் செயல்பட வேண்டும் என உரையாற்றினார்

கழக பிரச்சாரம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்புகள், கழகத்தோழர்கள் அர்ப்பணிப்பு உனர்வுடன் செயல்பட வேண் டியதின் அவசியம் குறித்து கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் இறுதியாக உரை யாற்றினார்   

தெற்கு நத்தம் க.சசிக்குமார், தெற்கு நத்தம் நாகராசு  தந்தையார் சிவஞானம், ஒக்கநாடு மேலையூர் வீரத்தமிழன் தந்தையார் நாராயணன், தலையாமங்கலம் இராமதாஸ் தந்தையார் தங் கையன், மண்டலகோட்டை ஞானம்  தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது

சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில்உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது

தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனை கூட்டங்களை கிளைகள் தோறும் நடத்துவது,

புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங் குவது, 

ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவ சாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கும்  இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

மே – 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *