மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி: மாணவர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உறையூர், மார்ச் 9– திருச்சி மாவட்ட சதுரங்கக் கூட்டமைப்பு (TDCA) அங்கீகாரத்துடன், ஸ்டார் செஸ் பவுண்டேஷன் (STAR CHESS FOUNDATION) நடத்திய மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்கப் போட்டி யில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருச்சி உறையூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், திருச்சி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக மாணவர் இசட்.முகமது ரியாஸ் பங்கேற்றார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில்,  தனது அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய முகமது ரியாஸ்,  மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளர், முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி,  தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *