சுயமரியாதைச் சுடரொளி மா.மீனாட்சிசுந்தரம் நினைவிடத்தில் மரியாதை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வேதாரண்யம், மார்ச் 9- பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மா.மீ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா வேதாரண்யத்தில் மிகச் சிறப்போடு கொண்டா டப்பட்டது.

திராவிடர் கழக திராவிட முன்னேற்றக் கழக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டு மறைந்த மா.மீ அவர்களின் நினை விடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் நாகை மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், காப் பாளர் கி.முருகையன், நாகை மாவட்ட கழக செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா, மா.மீ அவர்களின் மகனும் வேதை நகர் மன்ற தலைவரும் திரா விட முன்னேற்றக் கழ கத்தின் நகரக் கழக செய லாளருமான மா.மீ.புகழேந்தி, வேதை மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் வே.முருகையன், வேதை கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சதாசிவம், கழக மாவட்ட துணைச் செயலாளர் கி.சுர்ஜித், மா.மீ அவர்களின் இளைய மகன் மாவட்ட வழக்குரைஞர் அணியின் அமைப்பாளர் மா.மீ.அன்பரசன், முத்துலட்சுமி மீனாட்சிசுந்தரம், வேதை நகர் மன்ற உறுப்பினர் உமா புகழேந்தி, கவிதா அன்பரசன், மா.மீ.புகழ் இனியவன், வேதை ஒன்றியத்தின் துணைத் தலைவர் ஆறுமுகம், வேதை ஒன்றியத்தின் துணைச் செயலாளர் பஞ்சாபகேசன், வர்த்தக சங்கத்தின் மாநில பொறுப்பாளர் சி.தென்னரசு, மா.மீ.பேரவை பொறுப்பாளர் ஜி.எம்.ராம்குமார், மாவட்ட தொண்டர் அணி எஸ்.வி.டி.அருள், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பி.ஆர்.ஜிகே.விக்கினேஸ் மற்றும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அவர்கள் குடும்பத்தார் களும் பெருந்திரளாக கலந்து கொண்டு மாலை வைத்து மரியாதை செய்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *