கல்லக்குறிச்சி, மார்ச்9- கல்லக்குறிச்சி கழக மாவட்டம் திருக்கோவிலூரில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48 ஆவது நினைவு நாள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலும் நமது கடமையும் 15.3.2026 அன்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
இதனையொட்டி 4.3.2026 அன்று மாலை பொதுக் குழு உறுப்பினர் தி.பாலன் இல்லத்தில் கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் குழ.செல்வராசு வரவேற்புரை யாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் நோக்கத்தினை விளக்கி சிறப்புரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், கழகக் காப் பாளர் ம.சுப்பராயன், மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராசன் உள்ளிட்ட தோழர்கள் செயலாக்கவுரை வழங்கினார்கள்.
விழா சிறக்க நன்கொடை வழங்கிய, அறிவித்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கும், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய,நகர பொறுப்பாளர் களுக்கும் வாழ்த்துகளை தெரி வித்து பொறுப்பாளர்களை மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர் அறிவித்தார். பொறுப்பாளர்கள் விபரம்,
ஆறுமுகம் திருக்கோயிலூர் ஒன்றிய தலைவர், சேகர் திருக் கோயிலூர் ஒன்றிய கழக செயலாளர், மு.இளங்கோவன் வானாபுரம் ஒன்றிய கழக தலைவர், அ.தமிழரசன் வானா புரம் ஒன்றிய கழக செயலாளர், சி.அய்யனார் மணலூர்பேட்டை நகர கழகத் தலைவர், பா.சக்தி மணலூர்பேட்டை நகர கழக செயலாளர், அர.சண்முகம் ரிஷிவந்தியம் ஒன்றிய கழகத் தலைவர், தண்டபாணி ரிஷி வந்தியம் ஒன்றிய செயலாளர்.
இறுதியில் மாவட்ட கழகத் துணைத் தலைவர் தீர் மானங்களை வாசித்தார்.
உளுந்தூர்பேட்டை நகர பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து மறைவிற்கு மாவட்ட கழக சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது,
15.3.2026அன்று மாலை திருக்கோயிலூருக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
15.3.2026 அன்று தமிழர் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் அன்னை மணியம் மையார் 48ஆவது நினைவு நாள் மற்றும் 2026 தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலும் நமது கடமையும் என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது,
தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 10.3.2026 மாலை நயினார்பாளையம், உலகியநல்லூர், 11.3.2026 மாத்தூர், எடுத்தவாய்நத்தம் உள்ளிட்ட நான்கு ஊர்களிலும் கழக பேச்சாளர் இராம அன்பழகனை கொண்டு கொள்கை விளக்கக் கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது,
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலை,உண்மை இதழ்களுக்கு சந்தா சேர்த்து 15.3.2026 அன்று தமிழர் தலைவரிடம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்ட தோழர்கள்
கோ.சா.பாஸ்கர் மாவட்ட கழக தலைவர், ச.சுந்தரராசன் மாவட்ட கழக செயலாளர், ம.சுப்பராயன் மாவட்ட கழக காப்பாளர், குழ.செல்வராசு மாவட்ட கழகத் துணைத் தலைவர், தி.பாலன் கழக பொதுக்குழு உறுப்பினர், அர.சண்முகம், தே.செந் தமிழ்கோமான், பா.சக்தி, க.அன்பரசு, ஆ.கரிகாலன், அ.தமிழரசன், என்ஆறுமுகம், எம்..சேகர், வை.சந்திரசேகரன், மு.இளங்கோவன், சி.அய்யனார்.
முடிவில் கழக பொதுக்குழு உறுப்பினர் தி.பாலன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
