பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை ரெ.ரெங்கநாதன் மறைவிற்கு கழகத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவராக மிகச் சிறப்பாக பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை ரெ.ரெங்கநாதன் (வயது 82) அவர்கள் நேற்று (07.03.2026) உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

முதிர்ந்த வயதிலும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடக்கும் கழக நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாநாடுகள் அனைத்திலும் (கலந்துரையாடல் கூட்டம் உட்பட) தவறாமல் யாருடைய துணையுமின்றிக் கலந்து கொள்ளும் தீவிரமான பெரியார் பெருந்தொண்டர் – கொள்கை மாவீரர் ஆவார்!

அவர் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; கழகத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும்.

அவர்தம் பிரிவால் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி
தலைவர்,
 திராவிடர் கழகம்

8.3.2026

அவரது இறுதி ஊர்வலம் இன்று (08.03.2026) மாலை 3.00 மணியளவில் திருக்குவளை அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது!

தொடர்புக்கு : 9486739881

குறிப்பு: அவர் மகன் திராவிடமணி அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், துணைத் தலைவர் கலி. பூங்குன்றனும் தொலைப்பேசியில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்கள்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *