99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தூத்துக்குடி, மார்ச் 8 தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று (7.3.2026) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளையும் மற்றும் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் உட்பட நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு நடத்தி முடித்துள்ளோம். நாளை (9.3.2026) திருச்சியில் பிர மாண்ட மாநாடு நடந்த உள்ளோம். தி.மு.க. தலைவர் சொன்னதற்கு பிறகு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம். நாங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மக்களை சந்தித்து வருகிறோம். முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனை வரும் களத்தில் இருக்கிறோம்.

தி.மு.க.வை பொறுத்தவரை கலைஞர் சொன்னது போன்று சொன்னதை செய்வோம். செய்ததை சொல்வோம். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் கூறியதில் 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். சொல்லாத வாக் குறுதிகளையும் செய்துள் ளோம். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என்பது ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறி உள்ளோம். இந்த நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் முடித்த பிறகு கட்சியின் தலைவரிடம் கொடுத்தார்கள். அதனை தி.மு.க. தலைவர் வெளியிடுவார். நான் போட்டி யிடும் தொகுதி பற்றி தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ நான் அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *