சென்னை, ஏப்.12 இந்திய அஞ்சல் வங்கி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பொதுமக்களின் வச திக்காக நியாய விலைக் கடைகளில் விரைவில் ஆதார், பாஸ்போர்ட் சேவை துவங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறை மூலம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடை கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது. இதன் மூலம் இந்த துறைக்கு போதிய வருமானம் வருவது இல்லை என்றாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக கருதி இதனை அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த கடைகளை மக்களுக்கு பயனுள்ள வகையிலும், அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். பல மாநிலங்களில் நியாய விலைக் கடைகளுடன் இ-சேவை மய்யம் செயல்படுவதால் பொதுமக்களுக்கு உதவியாக இருப்பதோடு வருவாய் ஈட்டி வரு கிறது. அதேபோல, தமிழ்நாட்டி லும் நியாய விலைக் கடைகளுடன் இ-சேவை மயங்களை தொடங்க கூட்டுறவு துறை திட்டமிட்டு உள் ளது. நியாய விலைக் கடைகளை லாபகரமாக செயல்படுத்த வேண் டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அடுத்த 6 மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளிலும் இ-சேவை மய்யமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல் படுத்த முடிவு செய்யப்பட்டு உள் ளது.
இங்கு, கடவுச்சீட்டு எடுப்பதற் கான இணைய வழி மூலம் சமர்பித்தல், மின்சாரம், குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, டெலிபோன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத் துதல், ஆதார் அட்டையில் திருத் தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த மய் யத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை செயல் படுத்த இந்திய அஞ்சல் கட்டண வங்கி, இந்திய தேசிய பேமென்ட் கழகம் மற்றும் தனியார் சேவை வழங்குபவர்களுடன் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 867 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இதில், கிராமப்புறங்களில் 10 ஆயிரத்து 259 செயல்படுகின்றன. இந்த அஞ்சல் நிலையங்கள் கிரா மங்களில் செயல்படும் சுமார் 26 ஆயிரம் நியாய விலைக் கடைகளை நிறைவு செய்கின்றன. அவர்களால் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளை எளிதாக கட்டுப் படுத்த முடியும், என்று அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி நியாய விலைக் கடைகளில் இ-சேவை தொடங்கப்பட்டால், கட வுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை வழங்குதல், திருத்தங்களை செய்து பயன்பாட்டு பில் தொகை செலுத் துதல் மற்றும் ஆதார் தரவை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.