தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வினர் 15,372 பேர் விருப்ப வேட்பு மனுக்கள் குவிந்தன!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 8- தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் 15,372 பேர் விருப்ப வேட்பு மனுக்களை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள்” பெறப்பட்டதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்படும் என 20.02.2026 முதல் 06.03.2026 வரை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு, விருப்ப மனு பெறுவது 6.3.2026 அன்றோடு நிறைவடைந்துள்ளது.

தி.மு.கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 பேர் விருப்ப வேட்பு மனுக்களை வழங்கியுள்ளனர்.

தி.மு.கழகத் தலைவர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 பேர் விருப்ப வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தி.மு. கழகத்தின் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தி.மு.கழகத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.”

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *