புதுடில்லி, ஏப்.12 நாடு முழுவதும் கரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் நேற்று 5,676 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்தது.
24 மணி நேரத்தில் 21 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5.31 லட்சம். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 37,093ஆக உயர்ந்து விட்டது.