தஞ்சை மாநகராட்சி துணை மேயர்
டாக்டர் அஞ்சுகம் பூபதி திறப்பு
கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு பொது மக்களின் தாகம் தீர்க்க தமிழ்நாட்டு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி 07.04.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாநகராட்சி 51 வது வட்ட திமுக சார்பில் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து நல்ல குடிதண்ணீர், நீர்மோர், இளநீர், தர்பூசணி போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை கொண்ட கோடைகால தண்ணீர் பந்தலை தஞ்சை மாநகராட்சி துணை மேயரும், தி.மு.க. மாநில மருத்துவரணி துணை செயலாளருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் ஏற்பாடு செய்து திறந்துவைத்து பொதுமக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார். இந்நிகழ்வில் தி.மு.கழக 51வது வட்ட நிர்வாகிகள், தி.மு.க. ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.