ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : ரிசர்ச் ஆபிசர் (நேச்சுரபதி 1, யோகா 1), உதவி இயக்குநர் 17, அரசு வழக்கறிஞர் 48, ஜூனியர் இன்ஜினியர் (சிவில் 58, எலக்ட்ரிக்கல் 20), அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் 1 என மொத்தம் 146 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : உதவி இயக்குநர் 40, ஜூனியர் இன்ஜினியர் 30, மற்ற பதவிகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 27.4. 2023
விவரங்களுக்கு : upsc.gov.in