வடமணப்பாக்கம் வேதவள்ளி நல்லாசிரியர் விஜயராகவன் கல்வி அறக்கட்டளை தந்தை பெரியார் பேச்சுப் போட்டி – பரிசளிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வடமணப்பாக்கம், மார்ச் 6- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வடமணப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 6.2.2026 அன்று பிற்பகல் 3 மணியளவில் வேதவள்ளி நல்லாசிரியர் விஜயராகவன் கல்வி அறக்கட்டளை சார்பில் தந்தை பெரியார் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பங்கு பெற்ற மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு, நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

வேதவள்ளி விஜயரகவன் கல்வி அறக்கட்டளை சார்பாக தந்தை பெரியார் பற்றிய பேச்சுப் போட்டிகள் 23ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு பல நல்ல ஆலோசனைகளையும், முன்னேற்றக் கருத்துகளையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் பல அறிஞர்கள் வழங்கி அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.

வடமணப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.வெங்கட்ராமன் வரவேற்புரை ஆற்ற, பள்ளித்  தலைமை ஆசிரியர் ந.வேதபுரி தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் அ.இளங்கோவன், செய்யாறு நகர கழகத் தலைவர் தி.காமராசன் முன்னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர், வட்டார கல்வி அலுவலர் அண்ணா.சரவணன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வழ்த்திப் பேசினார். முதுகலை தமிழாசிரியர் ர.தமிழ்த்தேனீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் மு.செல்வன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பார்மசி கவுன்சில் பதிவாளர் மருத்துவர் மு.தமிழ்மொழி, வேதா மெடிக்கல் வி.தேவகுமார், வெ.எழில்மதி, அ.மகிழன், மாவட்ட கழக செயலாளர் பொன்.சுந்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

குடியரசு தினத்தன்று சிறந்த தலைமை ஆசிரியர் சான்று மாவட்ட ஆட்சித் தலைவரால் பெற்ற ந.வேதபுரிக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின சார்பாக அ.இளங்கோவன் சால்வை அணிவித்து பாராட்டு செய்யப்பட்டது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *