தமிழ்நாட்டில் பார்வை இழப்பு விகிதம் தேசிய அளவைவிட குறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.6 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் நேற்று (5.3.2026) நடை பெற்ற அரசு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், சுமார் ரூ.7.39 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்காக அவர் தொடங்கி வைத்தார். மேலும், மருத்துவ உலகின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல்களை உள்ளடக்கிய ‘ஜே.எம்.எம்.சி. மெடிசின்’ (JMMC Medicine) என்ற மருத்துவ இதழையும் அவர் வெளியிட்டார்.கண் சிகிச்சைத் துறையில் தமிழ்நாட்டின் மைல்கல்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை எட்டியுள்ள முக்கிய சாதனைகளைப் பட்டியலிட்டார்:
குறைந்த பார்வை இழப்பு விகிதம்: தேசிய அளவில் பார்வை இழப்பு விகிதம் 1.99 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சிறப்பான தடுப்பு நடவடிக்கை களால் மாநிலத்தில் இது 1.18 சதவீதமாக குறைந்துள்ளது.
நடமாடும் கண் மருத்துவப் பிரிவுகள்: கடந்த 5 ஆண்டுகளில் சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் புதிய பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சைகள் மற்றும் முகாம்கள்: தமிழ்நாட்டில் உள்ள 97 அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு கண் சிகிச்சை மய்யங்கள் மூலம் இதுவரை 4,15,301 கண் புரை அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மூலம் மாநிலம் முழுவதும் 4,502 கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய தொடர் நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் தனது பேட்டியின் போது குறிப்பிட்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (05.03.2026) சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 108 அவசரகால ஊர்தி சேவையை மேம்படுத்த வாட்ஸ்அப் (Whatsapp Chatbot) செயலியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.வினித் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி இராஜகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சாந்தாராமன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *