புழல், ஏப்.12 புழல் பகுதியில், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அமைக்கப்பட்ட விளை யாட்டுத் திடலை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.
பின்னர், வீரர்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை அவர் வழங்கினார்.
புழல், காவாங்கரை யில் இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 328 குடும்பங்களைச் சேர்ந்த 926 பேர் வசிக் கின்றனர். இங்குள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல் நலனை பேணிப் பாது காக்க, ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப் பட்டு, விளையாட்டு உப கரணங்களும் வழங்கப் படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் அறிவித்திருந் தார். அதன்படி, புழலில் இலங்கை தமிழர் அகதி கள் மறுவாழ்வு முகாமில் உள்ள காலியிடத்தில் விளையாட்டு மைதானம் தயாரானது.
இதனை, சிறுபான் மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ் தான் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர், அங் குள்ள இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங் கினார். நிகழ்ச்சியில், மாதவரம் சுதர்சனம் சட்டமன்ற உறுப்பினர், அயலார் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் ரமேஷ், ஜெசிந்தா லாசரஸ், சூரியகுமாரி, மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், வடக்கு பகுதி திமுக செயலாளர் வழக்குரைஞர் புழல் நாராயணன், வட்ட செயலாளர்கள் உயர்நீதி மன்ற குப்பன், சந்துரு மற்றும் அரசு அலுவலர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.