கூட்டணிக் கட்சிகளை ஹைஜாக் செய்து அழிப்பதே, பாஜகவின் வழக்கம் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி விமர்சித்துள்ளார். நிதிஷ்குமாரின் கட்சியை பா.ஜ.க., அபகரித்துவிடும் என தேர்தலுக்கு முன்பே சொன்னேன்; இன்று நடந்துவிட்டது. ஓ.பி.சி. ஒருவரை ரப்பர் ஸ்டாம்ப் முதலமைச்சராக வைத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். ஆட்கள்தான் பீகாரை ஆள்வர். மகாராட்டிராவில் சிவசேனா, பீகாரில் ஜனதா தளத்துக்கு நேர்ந்ததுதான் அதிமுகவுக்கும் (இபிஎஸ்) நடக்கும் என எச்சரித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே பள்ளி
பின்லாந்தின் கல்வி முறை உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. இங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகிறார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் பிறகு 15 நிமிட இடைவேளையும், சிறிய வீட்டுப்பாடமும் உண்டு. இந்த மன அழுத்தமில்லாத சூழல், குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றல் ஆர்வத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பின்லாந்து உலகளாவிய கல்வி மதிப்பீடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
‘போர்ப் பதற்றம்’ டிரம்மில் டீசலை பிடிக்கும் மக்கள்..
போர் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை ஏற்படும் என்று பலரும் பீதியில் உள்ளனர். இந்த சூழலில், பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக பெரிய கேன்களில் பலரும் பெட்ரோலை நிரப்பிச் செல்கின்றனர். சமீபத்தில், பஞ்சாபின் ஒரு பகுதியில் 800 லிட்டர் தண்ணீர் தொட்டியில் சிலர் டீசலை நிரப்பும் காட்சிப்ப திவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்தியாவிடம் போதுமான அளவு எரிசக்தி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
