டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 28 + 1 = திமுக – காங்கிரஸ் தொகுதி ஒப்பந்தம்: திமுக – காங்கிரஸ் இடையே நடந்த சுமுகமான பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு எடப்பட்டு, நேற்று (4.3.2026) இரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பு.
* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலகுகிறார்; மாநிலங்களவைக்கு செல்ல வாய்ப்பு; மகனை துணை முதல்வராக்க முடிவு. பாஜக முதலமைச்சர் பதவியை தட்டிச் செல்கிறது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் 130 ஜாதிப் பட்டியலில் 90 ஜாதிகள் மட்டுமே ஓபிசி பிரிவில் உள்ளதால், ஜாதிவாரி கணக்கெடுப்பில் குழப்பம். அனைத்து 130 ஜாதிகளையும் ஓபிசி பிரிவில் சேர்த்திட மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மகா விகாஸ் அகாடி (MVA) தேசியவாத காங்கிரஸ் (சரத்) தலைவர் சரத் பவாரை அதன் ஒரே மாநிலங்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக அறிவித்தது.
தி இந்து:
* திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தித் திணிப்பு மையால் அழித்து திமுக போராட்டத்தால் அகற்றம். அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு.
தி டெலிகிராப்:
* இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கடற்படை கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது; இந்தியாவிற்கு அதன் சொந்த சுற்றுப்புறத்தில் எந்த செல்வாக்கும் இல்லையா? அல்லது அந்த இடம் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் நிறுவனங்களுக்கு அமைதியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா,” என காங்கிரஸ் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கருநாடகாவில் எஸ்.சி. உள் ஒதுக்கீட்டில் குழப்பம்: பட்டியல் ஜாதியினருக்கான உள் இட ஒதுக்கீடு இல்லாமல் 56,432 அரசு பதவிகளை நிரப்பும் முடிவை கருநாடக அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. எஸ்.சி. பிரிவினர் மற்றும் அமைச்சர்களின் அழுத்தத்தை தொடர்ந்து, தற்போது உள்ள 15% எஸ்.சி. ஒதுக்கீட்டிற்குள் விகிதாசார உள் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சரவை விவாதிக்கும்.
– குடந்தை கருணா
