சென்னை, மார்ச் 5- உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், சீனாவும் முதன்மை வகிக்கின்றன.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தியாவின் மொத்தப் பொறியியல் உற்பத்தியில் 17 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே உருவாகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
