அண்ணல் அம் பேத்கர் அவர்களின் 133ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னையில்…
சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காலை 10 மணியளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்