தி.மு.க. மாநாட்டில் அ.தி.மு.க.விலிருந்து 80 சதவீதம் பேர் தி.மு.க.வில் இணைவார்கள் – ஓபிஎஸ் பேட்டி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, மார்ச் 5- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து செயல்பட்டு வந்த ஓபிஎஸ், தற்போது தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து 80 சதவீதம் பேர் விரைவில் திமுகவில் சேர்வார்கள் என்று பேட்டி அளித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் பகுதியில், வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா நேற்று (4.3.2026) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் மார்ச் 7ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரைத் திரட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டின் போது அ.தி.மு.க.விலிருந்து சுமார் 80 சதவீதத்தினர் தன்னுடன் இணைந்து திமுகவில் சேருவார்கள் என அதிர்ச்சியளித்துள்ளார்.

கடந்த அய்ந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், அடித்தள மக்களின் தேவைகளை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளதாக ஓபிஎஸ் புகழ்ந்து பேசினார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று ஓபிஎஸ் கணித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுகவிற்கு இது மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பு ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பது தென் மாவட்டத் தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *