வாருங்கள் வாசிப்போம், சுவாசிப்ேபாம் (3)

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அண்மையில் கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூருவில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளும்போது, மேடையில் தருமபுரி தமிழ்ச்செல்வி  அவர்கள் அவரதுசெல்வம் தலை சிறந்த டாக்டர் திராவிடன் அம்பேத்கர், மருமகள் டாக்டர் கீர்த்தி ஆகியோரின் அன்பளிப்பாக ‘Assembling India’s Constitution – A New Democratic History’ என்ற ஒரு புதிய, அரிய நூலை எனக்கு அவர்கள் சார்பாக வழங்கினர்.

அன்று இரவு ரயிலில் திரும்பும்போது படிக்கத் துவங்கினேன். மிக அருமையான தகவல்களின் களஞ்சியமாக உள்ள நூலாகும்!

ஏராளமான நூல்களைப் படித்து, அவற்றை பிழிந்து, பழச்சாறுபோல் பல வகை ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர்.

அந்த நூலின் நூலாசிரியர்கள் இருவர் –

‘ரோகிட் டி’ (Rohit De) என்ற யேல் பல்கலைக் கழக   வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர்.

இவரது நூல்கள் ஏற்கெனவே பலபரிசுகள் பெற்ற ஒரு அறிவுச் சுரங்கங்களாகும்.

Rohit De யோடு சேர்ந்து எழுதியுள்ள மற்றொரு பெண் எழுத்தாளர் ஓர்னிட் ஷேனி (Ornit Shani) என்ற இணைப் பேராசிரியர் – ‘ெஹய்ஃபா’ (Haifa) பல்கலைக் கழகத்தில் இவரும் இவரது நூல்களுக்குப் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

‘Assembling India’s Constitution – A New Democratic History’ 2025ஆம் ஆண்டு வெளியீடு இது! இந்தப் புத்தகம் ஓர் ஆய்வுக் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அதன்வரைவுக் கமிட்டித் தலைவர் டாக்டர் அம்பேத்கருக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் உரிய புதுமையான அவர்களுடைய எந்த கருத்துகளும் அதில் இடம் பெறாது. ஆனால், இந்திய வருணாசிரம தர்மமும், மனுதர்மமும், ஸநாதனச் சடங்குகள், உரிமைகள் பாதுகாக்கப்படவுமே அவர்கள் முனைப்போடு இருந்தனர்.

மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண் களுடைய பிரதிநிதிகள் அரசியல் நிர்ணய சபையில்  (அது தான் அரசியலமைப்புச் சட்டம் பற்றி விவாதித்து ஒவ்வொரு பிரிவையும் எழுதிட ஒப்புதல் தர வேண்டிய நாடாளுமன்ற  உறுப்பினர்கள் கொண்ட ஒரு மன்றம் –  The Constitution Legislative Assembly)   – அதில் இடம் பெற்ற பெண்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

வெறும் ஏழு பேர்தான்! என்ன தலை சுற்றுகிறதா? அதிலும் கூட பட்டியல் ஜாதிப் பெண் ஒரே ஒருவர்! அதுவும் கேரளாவிலிருந்து!

மற்ற எல்லோரும் உயர் ஜாதிப் பெண்களே!

ஆணுக்குள்ள உரிமை அனைத்தும் பெண்ணுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கவும், சொத்துரிமையில் பெண்ணுக்கு (இந்து சட்டத்தில்) மறுக்கப்படும் உரிமையை  அவர்கள் பெறாமல் தடுக்க உயர்ஜாதி ஸநாதன கூட்டத்தவர் ‘மதச் சுதந்தரம்’ என்ற போலித்தனத்தைவெகுவாக நீட்டி, நாடு முழுவதும் உள்ள ஸநாதன சம்பிரதாயவாதிகள்  அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவினருக்கு பல மெமொரண்டங்கள், கடிதங்கள் மூலம் அனுப்பி, அரசியல் நிர்ணய சபைக்குள் இருந்த ஸநாதனவாதிகளை தங்களது வயப்படுத்தி,  பெரும்பான்மையான மக்களுக்கான சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான கடிதங்களை பல மொழிகளில் அந்த வரைவுக் குழுவினருக்கு அனுப்பி, ‘ஒரு பெரும் இயக்கத்தினையே’ (‘Campaign’) தொடர்ந்து அவர்கள் நடத்தினர். அந்நாளைய காஞ்சி பெரிய சங்கராச்சாரியாரும், அவர்தம் சுற்றுக் கிரகங்களும்,  ஹிந்து மதத்தின் பேரால் உள்ள மற்ற பல அமைப்புகளும் டில்லிக்கு ஏராளமான கடிதங்களை தொடுத்து, ஒரு பெரிய தார்மீக யுத்தத்தையே போலி ஜனநாயகப் போர்வைப் போர்த்தி, மக்கள் கருத்து என்று வேடமிட்டவர்கள் – செயல்பட்டவர்கள் பற்றியும், நிகழ்வுகள்பற்றியும்  எப்படி அப்போது நடந்தனவோ அப்படியே அதற்குரிய ஆதாரங்களை வாரி அள்ளித் தந்து படிக்கும் எவரையும் ‘இப்படி நடந்ததா?’ என்று வியப்புக்கடலில் தள்ளிவிடும் இந்த நூல்!

எடுத்துக்காட்டாக ஒரு தகவல்:

தென்னாட்டில் உள்ள சென்னை மாநில அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் புதிதாக உருவாகும்போது அதில் மனிதர்களின் அடிப்படை உரிமைகள் 19(1) பிரிவுகள் அரசியலமைப்புச் சட்ட வரைவில் (Draft Consitution)  உள்ளதை அறிந்து, அதற்கு மாநில அரசு ஆதரவு தரக் கூடாது;  அரசியலமைப்புச் சட்டத்தில் அத்தகைய உரிமைகள் இடம் பெற்றால், ‘மதச் சுதந்திர’ சடங்கு – சம்பிரதாயம் வெகுவாக பாதிக்கப்பட்டு, உயர்ஜாதி உரிமைகளைப் பறித்து விடுமன்றோ? ஒருபோதும் ஏற்க முடியாது! என்றும் ஸநாதன சம்பிரதாயவாதிகள் கூறினர்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்களையும் – இதுவரை எளிதில் நாம் தெரிந்துகொள்ள முடியாத நடந்த நடப்புகளை – விருப்பு, வெறுப்பின்றி பதிவு செய்துள்ளனர் அந்நூலில் அந்நூலாசிரியர்கள்.

இருவரும் மிகவும் ஆய்வுப் பார்வையில் படித்து, அரிய வேண்டிய தகவல்களைத் தொகுத்துக் கொடுத்ததன்மூலம்  ஏன் இன்று ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க.   உயர்ஜாதியினர் அம்பேத்கரின் அரசியல மைப்புச் சட்டத்தை மாற்றி, மனுதர்மத்திற்கு அந்த இடத்தை அளிக்கச் சொல்லுகின்றனர் என்ற  மர்மம் நமக்குத் தெளிவாகும்.

இந்நூலை  படித்துப் பயன் பெறுங்கள்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *